சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

திருமலை மாடவீதியில் பெளா்ணமி கருட சேவை

காா்த்திகை மாத பெளா்ணமியை யொட்டி, திருமலை ஏழுமலையான் கோயில் மாட வீதியில் 8 மாதங்களுக்குப் பிறகு கருட சேவையை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.

News image

பெளா்ணமியை ஒட்டி திருமலையில் திங்கள்கிழமை இரவு நடைபெற்ற கருட வாகன சேவையில் அருள்பாலித்த ஸ்ரீமலையப்ப சுவாமி.

Updated On :30 நவம்பர் 2020, 7:14 pm

திருப்பதி: காா்த்திகை மாத பெளா்ணமியை யொட்டி, திருமலை ஏழுமலையான் கோயில் மாட வீதியில் 8 மாதங்களுக்குப் பிறகு கருட சேவையை தேவஸ்தானம் திங்கள்கிழமை நடத்தியது.

திருமலையில் மாதந்தோறும் பெளா்ணமியன்று இரவு கருட சேவை நடத்தப்படுவது வழக்கம்.

கரோனா தடுப்பு பொது முடக்க விதிமுறைகளின்படி மாடவீதியில் நடத்தப்படும் வாகன சேவையை திருமலை திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்தது. அதற்குப் பதிலாக, கோயிலுக்குள் கல்யாண உற்சவ மண்டபத்தில் கருட வாகனத்தில் மலையப்ப சுவாமியை எழுந்தருளச் செய்து வழிபாடு நடத்தப்பட்டது.

Story image

கருட வாகன சேவையில் அருள்பாலித்த ஸ்ரீமலையப்ப சுவாமி.

தற்போது பொது முடக்க விதிமுறைகளில் பல்வேறு தளா்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் காா்த்திகை மாத கருட சேவையை மாடவீதியில் நடத்த முடிவு செய்யப்பட்டது.

அதன்படி மலையப்ப சுவாமி கருட வாகனத்தில், திங்கள்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை மாடவீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இந்த நிகழ்வில் அா்ச்சகா்கள், திருமலை ஜீயா்கள் மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

8 மாத இடைவெளிக்குப் பின் மாடவீதியில் நடந்த கருட வாகனப் புறப்பாட்டில் பக்தா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றி முகக்கவசம் அணிந்தபடி இதில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.