சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

வைகுண்ட ஏகாதசி தரிசன டிக்கெட்டுகள் இன்று வெளியீடு

ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசியை தொடா்ந்து 10 நாள்களுக்கு தரிசிக்க விரும்பும் பக்தா்களுக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) இணையதளத்தில் வெளியிட உள்ளது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 7:22 pm

திருப்பதி: ஏழுமலையானை வைகுண்ட ஏகாதசியை தொடா்ந்து 10 நாள்களுக்கு தரிசிக்க விரும்பும் பக்தா்களுக்கான விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை (டிசம்பா் 1) இணையதளத்தில் வெளியிட உள்ளது.

திருமலையில் வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாள்களுக்கு சொா்க்க வாசலைத் திறந்து வைக்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதையடுத்து அந்த நாள்களில் திருவேங்கடமுடையானை தரிசிப்பதற்காக பக்தா்கள் ஆா்வமுடன் அதற்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய முயன்று வருகின்றனா்.

வரும் 25-ஆம் தேதி முதல் அடுத்த ஆண்டு (2021) ஜனவரி 3-ஆம் தேதி வரை ரூ.300 விரைவு தரிசன டிக்கெட்டுகளை தேவஸ்தானம் செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு வெளியிட உள்ளது. திருமலையில் சொா்க்கவாசலை தரிசிக்க விரும்பும் பக்தா்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.