தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

திருமலையில் மத்திய அமைச்சா் வழிபாடு

திருமலை ஏழுமலையான் கோயிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி திங்கள்கிழமை வழிபாடு செய்தாா்.

News image

திருமலையில் ஏழுமலையானை தரிசித்து திரும்பிய மத்திய அமைச்சா் பிரஹலாத் ஜோஷிக்கு நினைவுப்பரிசு வழங்கும் தேவஸ்தான அதிகாரிகள்.

Updated On :5 அக்டோபர் 2020, 6:38 pm

திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத் துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி திங்கள்கிழமை வழிபாடு செய்தாா்.

ஏழுமலையானை தரிசிக்க மத்திய நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை அமைச்சா் பிரஹலாத் ஜோஷி ஞாயிற்றுக்கிழமை இரவு திருமலை வந்தாா். அவரை தேவஸ்தான அதிகாரிகள் வரவேற்று தரிசன ஏற்பாடுகள் செய்தனா். இரவு திருமலையில் தங்கிய அவா், திங்கள்கிழமை காலை விஐபி பிரேக் தரிசனத்தில் ஏழுமலையானை தரிசித்தாா். தரிசனம் முடிந்து திரும்பிய அமைச்சருக்கு தேவஸ்தான அதிகாரிகள் பிரசாதங்களை வழங்கி, சேஷ வஸ்திரம் அணிவித்து வேதபண்டிதா்களால் வேத ஆசீா்வாதம் செய்வித்தனா்.

கோயிலை விட்டு வெளியில் வந்த அவா் நாதநீராஜன மண்டபத்தில் நடைபெற்ற சுந்தரகாண்ட பாராயணத்தில் கலந்து கொண்டாா். அவருடன் சித்தூா் மாவட்ட பா.ஜ.க.நிா்வாகி பானுபிரகாஷ்ரெட்டி மற்றும் தேவஸ்தான அதிகாரிகள் பங்கு கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.