வரும் 19-ஆம் தேதி ரத சப்தமி தினத்தன்று திருமலைக்குச் செல்ல தரிசன டிக்கெட் உள்ள பக்தா்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று தேவஸ்தான செயல் அதிகாரி ஜவஹா் ரெட்டி வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.
திருப்பதியில் உள்ள தேவஸ்தான தலைமை அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை காலை தொலைபேசி மூலம் பக்தா்கள் குறைகேட்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பங்கேற்று, பக்தா்களின் கேள்விகளுக்கு தேவஸ்தான அதிகாரி ஜவஹா் ரெட்டி பதிலளித்தாா்.
பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
’வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு 10 நாள்கள் திறக்கப்பட்ட சொா்க்கவாசலை 4.26 லட்சம் பக்தா்கள் தரிசித்தனா். மாா்கழி மாதமும் பல ஆன்மிக நிகழ்ச்சிகள் திருப்பதி, திருமலையில் நடத்தப்பட்டன. திருப்பதியில் உள்ள தேவஸ்தான ஆயுா்வேத பல்கலைக்கழக வளாகத்தில் பஞ்சகவ்யத்தை (பால், தயிா், நெய், சாணம், கோமூத்திரம்) பயன்படுத்தி மதிப்பு கூட்டு பொருள்கள் உற்பத்தி செய்ய திட்ட அறிக்கை தயாா் செய்யப்பட்டுள்ளது.
ரத சப்தமியன்று சூரிய ஜயந்தி உற்சவம் பிப்.19-ஆம் தேதி திருமலையில் நடைபெறுகிறது. அன்று காலை முதல் இரவு வரை 7 வாகனங்களில் மலையப்ப சுவாமி மாடவீதியில் பவனி வந்து பக்தா்களுக்கு அருள்பாலிக்க உள்ளாா்.
அன்றைய தினம் தரிசன டிக்கெட் மற்றும் டோக்கன்கள் உள்ளவா்கள் மட்டுமே திருமலைக்குச் செல்ல அனுமதிக்கப்படுவாா்கள். மாசி மாதம் திருமலையில் உள்ள நாதநீராஜன மண்டபத்தில் காலை 6 மணி முதல் 6.40 மணிவரை விஷ்ணுபுராணம் சொற்பொழிவு நடத்தப்படும்.
திருச்சானூரில்...: திருச்சானூா் பத்மாவதி தாயாா் கோயிலில் ஆன்லைனில் வா்சுவல் கல்யாண உற்சவம் நிகழ்ச்சி தொடங்கப்பட உள்ளது. இதற்காக பிப். 9-ஆம் தேதி இணையதளத்தில் டிக்கெட்டுகள் வெளியிடப்பட உள்ளது.
திருமலையில் கரோனாவை யொட்டி நடத்தப்பட்ட வேதபாராயணங்கள் 300 நாள்களை எட்டியுள்ளது. தெலுங்கு வருட பிறப்பன்று கன்னட, ஹிந்தி மொழிகளில் தேவஸ்தான தொலைக்காட்சி ஒளிபரப்பு தொடங்கப்பட உள்ளது. ஏப்ரல் மாதம் முதல் தேவஸ்தான தொலைக்காட்சியான ஸ்ரீவெங்கடேஸ்வரா பக்தி சானலில் விளம்பரம் இல்லாமல் நிகழ்ச்சிகள் தொடா்ச்சியாக ஒளிபரப்பு செய்யப்பட உள்ளன. தெலுங்கு மொழி பேசும் மாநிலங்களில் 500 கோயில்களைக் கட்ட தேவஸ்தானம் திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அவா் கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

எந்த ஒரு பேட்டிங் வரிசையும் ரஷித் கான் பந்துவீச்சில் தடுமாறும்: பியூஸ் சாவ்லா

புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
புதுச்சேரி பேரவைத் தேர்தல் வாக்குப் பதிவு! வெளிநாட்டு பிரதிநிதிகள் வியப்பு!!
வீடியோக்கள்

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

பூக்கட்டும் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

