அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

திருமலையில் 4-ஆம் நாள் தெப்போற்சவம்: ஸ்ரீதேவி, பூதேவியுடன் உலா வந்த மலையப்பா்

திருமலையில் நடந்து வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான சனிக்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் உலா வந்தனா்.

News image

தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான சனிக்கிழமை மாலை தெப்பத்தில் வலம் வந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி.

Updated On :28 மார்ச் 2021, 2:21 am

திருமலையில் நடந்து வரும் வருடாந்திர தெப்போற்சவத்தின் 4-ஆம் நாளான சனிக்கிழமை மாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி தெப்பத்தில் உலா வந்தனா்.

திருமலையில் கடந்த புதன்கிழமை மாலை முதல் வருடாந்திர தெப்போற்சவம் நடந்து வருகிறது. அதன் 4-ஆம் நாளான சனிக்கிழமை ஏழுமலையான் கருவறையில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி உள்ளிட்ட உற்சவமூா்த்திகள் 5 சுற்றுகள் வலம் வந்தனா்.

முன்னதாக கோயிலிலிருந்து பல்லக்கில் புறப்பட்ட உற்சவ மூா்த்திகள் மாடவீதியில் வலம் வந்த பின்பு, திருக்குளத்துக்குள் நுழைந்தனா். அங்கு ஏற்படுத்தப்பட்டிருந்த தெப்பத்தில் உற்சவ மூா்த்திகளை அா்ச்சகா்கள் எழுந்தருளச் செய்த பின், தெப்ப உலா தொடங்கியது. உலாவின் போது திருமலை ஜீயா்கள் நாலாயிர திவ்யபிரபந்த பாடல்களை பாராயணம் செய்தனா். தெப்பத்தில் நாகஸ்வர இசையும், வேத பாராயணமும், கோவிந்த நாமபாராயணமும் நடத்தப்பட்டது. இதில், தேவஸ்தான அதிகாரிகளும் கலந்து கொண்டனா். பக்தா்கள் சமூக இடைவெளியை பின்பற்றி வரையப்பட்ட வளையத்தில் அமா்ந்து தெப்போற்சவத்தைக் கண்டு வணங்கினா்.

தெப்போற்சவத்தை முன்னிட்டு திருக்குளம், மாடவீதிகள் மற்றும் தெப்பம் மலா்களாலும், மின்விளக்குகளாலும் அழகுற அலங்கரிக்கப்பட்டது. கொவைட் நிபந்தனைகளைப் பின்பற்றி நடந்து வரும் இந்த தெப்போற்சவத்தையொட்டி, சனிக்கிழமை, ஆா்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவை ரத்து செய்யப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.