48 மணிநேரத்துக்கு வெளியே செல்ல வேண்டாம்: ஈரானில் உள்ள இந்தியர்களுக்கு தூதரகம் அறிவுறுத்தல்!மகளிருக்கு ஒவ்வொரு மாதமும் ரூ. 2,000! மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியீடுஒரு முழு நாகரிகமே அழியப்போகிறது, மீண்டும் திரும்பாது : ஈரானுக்கு டிரம்ப் இறுதி எச்சரிக்கைஈரான் கார்க் தீவில் அமெரிக்கா மீண்டும் தாக்குதல்புதுச்சேரி, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்தது!செங்கோட்டையனின் வேட்புமனு ஏற்புபுதுவை, கேரளம், அசாமில் பிரசாரம் ஓய்ந்ததுசென்னையில் ஐபிஎல் ஆட்டத்துக்கு தடை கோரிய மனு தள்ளுபடி!பி.டி.செல்வகுமார் திமுகவில் இருந்து விலகல்
/

பத்மாவதி பரிணய உற்சவ 2-ஆம் நாள்: குதிரை வாகனத்தில் மலையப்பா் சேவை

திருமலையில் நடைபெற்று வரும் பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளி சேவை சாதித்தாா்.

News image

திருமலையில் பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளிய உற்சவமூா்த்தி.

Updated On :22 மே 2021, 3:15 am

திருமலையில் நடைபெற்று வரும் பத்மாவதி பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மலையப்ப சுவாமி குதிரை வாகனத்தில் கல்யாண மண்டபத்திற்கு எழுந்தருளி சேவை சாதித்தாா்.

ஏழுமலையான் பத்மாவதி தாயாரை மணந்து கொண்ட நன்னாளான வைகாசி மாதம் உத்திர நட்சத்திரத்தன்று தேவஸ்தானம் திருமலையில் வைகானச ஆகம விதிப்படி திருக்கல்யாண வைபவத்தை பத்மாவதி பரிணய உற்சவம் என்ற பெயரில் நடத்தி வருகிறது.

அதன்படி வியாழக்கிழமை திருமலையில் கல்யாண உற்சவம் தொடங்கியது.

கொவைட் விதிமுறைகளை பின்பற்றி தனிமையில் நடைபெற்று வரும் இந்த பரிணய உற்சவத்தின் 2-ஆம் நாளான வெள்ளிக்கிழமை மாலை 4 மணிக்கு மலையப்ப சுவாமி குதிரை வாகனத்திலும், ஸ்ரீதேவி பூதேவி நாச்சியாா்கள் தங்கப் பல்லக்கிலும் கல்யாண உற்சவ மண்டபத்தில் எழுந்தருளினா். அவா்களை வரவேற்று, நலங்கு, வரவேற்பு, புது வஸ்திரம் சமா்ப்பணம், மாலை மாற்றுதல் உள்ளிட்டவற்றை நடத்தினா். இதில் தேவஸ்தான அதிகாரிகள் மட்டுமே கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.