சூரிய பகவான் தனுர் ராசியில் இருந்து மகர ராசியில் பிரவேசிப்பது மகர சங்கராந்தியாகும். பிலவ வருஷ பஞ்சாங்கத்தில் தை மாதம் 1ந் தேதி (சூரியன் சஞ்சாரம்) மகர ரவி பிரவேசிக்கும் காலம். சூரிய அஸ்தமன காலம் (அன்றைய பகல் வேளை - அகஸ்) முடியும் முன்பு ரவி சஞ்சாரம் அடுத்த ராசியில் பிரவேசித்தால், அன்று தான் அடுத்த ராசியுடைய மாதத்தின் முதல் நாளாகும்.
எல்லோரும் எதிர்ப்பார்த்து இருப்பது இந்த உத்தராயணம் என சொல்ல கூடிய அயணம் ஆரம்பமாவது ஆகும். இது ஆறு மாதங்கள் அதாவது தை மாதம் முதல் ஆனி மாதம் முடிய இருக்கும் அயணமாகும். மகாபாரத போர் சமயத்தில் பீஷ்மாச்சாரியார் எதிர்ப்பார்த்து காத்திருந்த காலம் இந்த உத்தராயணம் ஆகும். இது மிகவும் அதிக பலன் அளிக்ககூடிய அயண மாதங்களாகும்.
தை மாதம் முதல் நாள் பொங்கல் பண்டிகையாகும் கூடவே உத்தராயண புண்யகாலம் எனப்படும் மாத பிறப்பு தர்ப்பணம் ஆகும். இது இரண்டும் எப்போதும் சேர்ந்து வரும். பல சமயங்களில் மக்களுக்கு சந்தேகம் ஏற்படுவது, பொங்கல் பண்டிகையை எப்போது கொண்டாடுவது மற்றும் மாத பிறப்பு தர்ப்பணத்தை எப்போது செய்வது.
பொங்கல் பண்டிகை என்பது எப்போதும் புது பானை வைத்து பொங்கல் செய்வது எல்லோருக்கும் தெரிந்த விஷயம். ஆனால் எந்தந்த லக்னங்களில் செய்வது உகந்தது என்றால் இதற்கு மகர மற்றும் கும்ப லக்னங்கள் உத்தமமாகும் மற்றவை மத்திமமாகும்.
மகர என்றால் தை மாதத்தையும் மற்றும் கும்பம் என்றால் பானையை குறிக்கும் ஆகையால் நம் முன்னோர்கள் கடைபிடித்த நேரங்களை நாமும் கடைபிடித்தால் நன்மை கிட்டும்.
பொங்கல் காப்பு கட்ட நல்ல நேரம்
13.01.2021 - மார்கழி 29 - வியாழக்கிழமை
காலை 07.30 - 09.00
காலை 10.30 - 12.00
தைப் பொங்கல் வைக்க நல்ல நேரம்
14.01.2021 - தை 01 - வெள்ளிக்கிழமை
மதியம் 12.00 - 01.30 வரை
மாலை 04.30 - 06.00 வரை
மாட்டுப் பொங்கல் பூஜை செய்ய நல்ல நேரம்
15.01.2021 - தை 02 - சனிக்கிழமை
காலை 07.30 - 09.00
காலை 10.30 - 12.00
சனிக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்
சிலர் கனு சனிக்கிழமை வைப்பார்கள்.
காலை 07.30 - 09.00
காலை 10.30 - 12.00
ஞாயிற்றுக்கிழமை கனு பூஜை செய்ய நல்ல நேரம்
சிலர் கனு தை 03 அனுசரிப்பார்கள்.
காலை 06.00 - 07.30
காலை 10.30 - 12.00
உத்தராயணம் புண்யகால (தை மாத பிறப்பு) தர்ப்பணம் எப்போது?
காலை 08.00 மணிக்குள் (தர்ப்பணம் செய்வோர் விரதம் இருந்து செய்தால் முழு பலனையும் அடையலாம்) குளித்துவிட்டு உத்தராயண புண்யகால தை மாத பிறப்பு பிதுர் தர்ப்பணத்தை செய்யவும்.
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 7845 11 9542
ramjothidar@gmail.com
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் பாய்ந்ததில் 2 விவசாயிகள் உயிரிழப்பு

காணாமல்போன 194 பேரை மீட்டு குடும்பத்தினருடன் சோ்த்துவைப்பு தில்லி காவல்துறை நடவடிக்கை

தெலங்கானாவில் மருந்து ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் பலி, 8 பேர் காயம்

ராயல் என்ஃபீல்டு விற்பனை 31 சதவீதம் அதிகரிப்பு!
வீடியோக்கள்

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு


