பண வரவு அதிகரிக்கும் இந்த ராசிக்கு: வாரப் பலன்கள்

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 
வாரப்பலன்கள்
வாரப்பலன்கள்
Updated on
3 min read

இந்த வாரப் பலன்களை தினமணி ஜோதிடர் கே.சி.எஸ்.ஐயர் கணித்து வழங்கியுள்ளார். 

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

பயணங்களில் புதிய அனுபவம் கிடைக்கும்.  சொத்துகளில் வருமானம் வரத் தொடங்கும்.  எதிர்காலத்துக்குத் திட்டமிடுவீர்கள்.  எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பிறருக்கு உதவிகளைச் செய்வார்கள்.  வியாபாரிகளுக்கு லாபம் கிடைக்கும்.  விவசாயிகள் புதிய கால்நடைகளை வாங்குவார்கள்.  

அரசியல்வாதிகள் வெற்றி வாகை சூடுவார்கள்.  கலைத்துறையினருக்கு வருவாய் உயரும். பெண்கள் உறவினர்களிடம் அன்பைப் பொழிவார்கள். மாணவர்கள் விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்
படுத்துவார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

கனிவான பேச்சுகளால்  பிறரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.  போட்டிகளில் வெற்றி கிடைக்கும்.  இலக்குகளை நிர்ணயித்து உழைப்பீர்கள். தவறுகளைத் திருத்திக் கொள்வீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு பொருளாதார இன்னல்கள் குறையும்.  வியாபாரிகள் புதிய முயற்சியில் ஈடுபடுவார்கள்.  விவசாயிகள் விவசாயத்தைப் பெருக்குவார்கள். 

அரசியல்வாதிகளின் மனதில் மாற்றம் உருவாகும். கலைத்துறையினருக்கு தனவரவு சீராகவே இருக்கும்.  பெண்களின் உடல், மன வளம் மேம்படும். மாணவர்கள் காரியங்களைத் தாமதமாகச் செய்து முடிப்பார்கள்.
சந்திராஷ்டமம்}இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

தொழிலை விரிவுபடுத்துவீர்கள். உடனிருப்போர் ஆதரவாக இருப்பார்கள். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர்கள். வாக்கு சாதுர்யத்தால்  ஆதாயம் அடைவீர்கள்.  

உத்தியோகஸ்தர்கள் புகழ் உயரக் காண்பார்கள். வியாபாரிகள் லாபம் அடைவார்கள்.  விவசாயிகள் வயல் வரப்பு சண்டைகளில் ஈடுபட மாட்டார்கள். அரசியல்வாதிகள் மேலிடத்திடம் அனுசரித்து இருப்பார்கள். 

கலைத்துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள். மாணவர்கள் புதிய பாடப்பிரிவில் சேருவார்கள். 

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

மகிழ்ச்சியான சிந்தனைகள் உண்டாகும்.  வசிக்கும் வீட்டை புதுப்பிப்பார்கள். தர்மச் சிந்தனைகள் மேலோங்கும். சுப விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். வியாபாரிகளுக்கு புதிய அனுபவம் கிடைக்கும். 

விவசாயிகள் கால்நடைகளுக்கு சிறிது செலவழிக்க நேரிடும். அரசியல்வாதிகள் நினைத்த காரியங்கள் நிறைவேறும்.  கலைத்துறையினர் பக்குவமாக நடந்துகொள்வார்கள்.  பெண்களுக்கு புதுவித எண்ணம் தோன்றும். மாணவர்களின் பயணம் தாமதமாக முடிவடையும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

காரியங்களில் வெற்றி கிடைக்கும். புதிய பொருள்களை வாங்குவீர்கள்.  புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.  உடன்பிறந்தோர் பேச்சுக்கு மதிப்பு அளிப்பார்கள். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளிடம் நன்மதிப்பைப் பெறுவார்கள். 

வியாபாரிகள்  வளர்ச்சியைக் காண்பார்கள். விவசாயிகள் பிறரை அனுசரித்துச் செல்வார்கள். அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளை மகிழ்ச்சியுடன் ஆற்றுவார்கள்.

கலைத்துறையினருக்குப் பேச்சில் கவனம் தேவை. பெண்கள் உறவினர்களை அன்பாக நடத்துவார்கள். மாணவர்கள் கல்வியில் சாதனைகளைச் செய்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பண வரவு சிறப்பாகவே இருக்கும். குடும்பத்தில் குதூகலம் நிறையும். சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வயிற்று உபாதைகள் ஏற்பட்டு தீரும்.

உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கொடுக்கல் - வாங்கலில் திருப்பம் ஏற்படும்.  விவசாயிகள் புதிய குத்தகைகளைப் பெறுவார்கள்.  அரசியல்வாதிகளுக்குப் பல பிரச்னைகள் தீரும். 

கலைத்துறையினர் புதிய யுக்திகளைக் கையாளுவார்கள். பெண்கள் கணவரின் அன்பையும் பாராட்டையும் பெறுவார்கள். மாணவர்கள் தங்கள் பாடங்களைக் கவனத்துடன் படிப்பார்கள்.

சந்திராஷ்டமம் - ஏப். 21.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம் முடிய)

வருமானத்தில் ஏற்றத் தாழ்வுகள் நீங்கும்.  பயணம் புதிய நம்பிக்கையைக் கொடுக்கும். சொத்துகளில் நன்மைகள் உண்டாகும்.  சுபச் செய்திகள் கிடைக்கும்.  உத்தியோகஸ்தர்களை மேலதிகாரிகள் புரிந்துகொள்வார்கள்.  

வியாபாரிகள் புதிய சந்தைகளை நாடுவீர்கள்.  விவசாயிகள் விவசாயத்தை அபிவிருத்தி செய்வீர்கள். அரசியல்வாதிகள் பிறரின் கருத்துகளுக்கு மதிப்பளிப்பார்கள்.

கலைத்துறையினருக்கு பயணங்களால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்கள் குழந்தைகளுக்கு ஆலோசனைகளை அளிப்பார்கள். மாணவர்களுக்கு புதிய நட்பு கிடைக்கும்.

சந்திராஷ்டமம் - ஏப். 22,23,24.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

பெற்றோரின் அறிவுரைகளைக் கேட்பீர்கள்.  தாய்வழி உறவினர்களால் உதவிகள் கிடைக்கும். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள்.  சமுதாயத்தில் உயர்ந்தோரின் நட்பும் உதவியும் கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். வியாபாரிகளுக்கு தேவையான உதவிகள் கிடைக்கும்.  விவசாயிகளுக்கு குழப்பம் ஏற்பட்டு நீங்கும்.  

அரசியல்வாதிகள் தடைபட்ட பணிகளைச் செய்து முடிப்பார்கள். கலைத்துறையினர் புதிய நட்பால் உயர்வடைவார்கள். பெண்களுக்கு குடும்பத் தேவைகள் பூர்த்தியாகும். மாணவர்கள் சுற்றுலா செல்வார்கள்.

சந்திராஷ்டமம்}ஏப். 25,26.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பிற விஷயங்களை ஆர்வத்துடன் அறிந்துகொள்வீர்கள். முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவீர்கள். எதிர்மறை எண்ணம் வராமல் கவனமாக இருக்கவும். சொத்து பிரச்னைகள் விலகிவிடும். 

வியாபாரிகளுக்கு பிறர் உதவிகள் கிடைக்கும். விவசாயிகள் கொள்முதலில் புதிய லாபத்தை  எட்டுவார்கள். அரசியல்வாதிகள் தொண்டர்களின் கருத்து வேறுபாடுகளைத் தீர்த்து வைப்பார்கள்.

கலைத்துறையினருக்குப் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். பெண்கள் கலகலப்பான சூழலைக் காண்பார்கள். மாணவர்களின் புதிய முயற்சிகள் நிறைவேறும்.

சந்திராஷ்டமம் - ஏப்.27.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

சுறுசுறுப்புடன் இருப்பீர்கள்.  எதிர்காலச் சிந்தனைகள் அதிகரிக்கும். எதிர்ப்புகளை அறிந்துகொள்வீர்கள். வாகனங்களைப் பழுது பார்க்க நேரிடும்.

உத்தியோகஸ்தர்களுக்கு சாதகமான சூழல் நிலவும்.  வியாபாரிகள் புதிய நட்பால் உயர்வடைவார்கள். விவசாயிகள் கடுமையாக உழைப்பார்கள். 

அரசியல்வாதிகளின் தனிப்பட்ட வாழ்க்கையில் மாற்றம் உண்டாகும். கலைத்துறையினருக்கு நண்பர் வழியில் ஆதரவு கிடைக்கும்.  பெண்கள் பெற்றோரின் ஆதரவால் திருப்தி அடைவார்கள். மாணவர்கள் ஆரோக்கியத்தைப் பெருக்கிக் கொள்வார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

அரசு விஷயங்களில் நன்மைகள் அதிகரிக்கும். சமூகப் பணியில் இருப்போர் விவேகத்துடன் நடந்துகொள்வீர்கள்.  சுப காரிய விஷயங்கள் சாதகமாகும். 

உத்தியோகஸ்தர்களின் வேலைத்திறமையை பாராட்டுவார்கள். வியாபாரிகளின் அந்தஸ்து உயரும். விவசாயிகள் பழைய குத்தகைப் பாக்கிகளைத் திருப்பிச் செலுத்துவார்கள். அரசியல்வாதிகள் கட்சி முன்னேற்றத்துக்காக உழைத்து நற்பெயரை எடுப்பார்கள். 

கலைத்துறையினரின் கடந்த கால கசப்புகள் மறையும்.  பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவார்கள்.  மாணவர்கள் நண்பர்களுக்கு கற்றுத் தருவார்கள்.

சந்திராஷ்டமம் -இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

சாந்தமாகப் பணிபுரிவீர்கள். பொருளாதார நிலை சிறப்பாகத் தொடரும். புனித திருத்தலங்களுக்கு குடும்பத்துடன் செல்வீர்கள். பெரியோர்களின் ஆசி கிடைக்கும். 

உத்தியோகஸ்தர்களுக்குப் பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரிகளுக்கு கூட்டாளிகளை நன்கு அறியும் சந்தர்ப்பம் ஏற்படும். விவசாயிகள் நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவார்கள். 

அரசியல்வாதிகள் தொண்டர்களிடம் விவாதங்களைச் செய்வார்கள். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். பெண்கள் கணவர் குடும்பத்தாரின் ஆதரவைப் பெறுவார்கள். மாணவர்கள் விவேகத்துடன் இருப்பார்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com