ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2024 (கும்பம்)

கும்ப ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 
ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள் 2024 (கும்பம்)

கும்ப ராசிக்கான ஆங்கிலப் புத்தாண்டு பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் கணித்து வழங்கியுள்ளார். 

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

எவ்வள்வு கடினமான நேரத்திலும், எதையும் திடமான சிந்தனையுடன் செயல்படுத்திவரும் கும்ப ராசி அன்பர்களே!!

இந்த ஆண்டில் அதிக வெற்றிகளைப் பெறுவீர்கள். நீங்கள் பொருளாதாரத்தில் வளர்ச்சி உண்டாகக் காண்பீர்கள். தெய்வ வழிபாட்டில் நாட்டம் அதிகரிக்கும். தள்ளி வைத்திருந்த காரியங்களைச் செய்யத் தொடங்குவீர்கள். பெற்றோருடன் இணக்கமான உறவு உண்டாகத் தொடங்கும். உங்களுடைய தெளிவான எண்ணங்களால் குடும்பத்தில் உங்களின் மதிப்பு மரியாதை உயரும். பெரியோர்களின் தொடர்பு உண்டாகி உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். நெடுநாளாக உங்களை வாட்டி வதைத்த உடலுபாதைகளிலிருந்து விடுபடுவீர்கள். வெளியூர் – வெளிநாட்டிலிருந்து நல்ல செய்திகள் உங்களை வந்தடையும். லாபகரமான முதலீடுகளைச் செய்து உபரி வருமானம் நிரந்தரமாக வர வழி வகுத்துக் கொள்வீர்கள். மறைமுகக் கலைகளான ஆழ்மனத் தியானம் போன்றவற்றைச் சுயமாகக் கற்றுக் தேர்ந்து அடுத்தவர்களுக்கும் கற்றுத் தருவீர்கள். சகோதர சகோதரிகளின் குறைகளைப் பெரிது படுத்தமாட்டீர்கள், மேலும் முன்பு உங்களை ஏமாற்றியவர்களையும் இந்த காலகட்டத்தில் மன்னித்துவிடுவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு..

விவசாயத்துறை சார்ந்த அரசு ஊழியர்கள், தேயிலை, காப்பி, ஏலக்காய் போன்ற தனியாருக்கு சொந்தமான எஸ்டேடுகளில் மேற்பார்வையிடும் உயர் அதிகாரிகள் தகுந்த கவனம் செலுத்தி உற்பத்தியை பெருக்குவார்கள். ராணுவத்தில் உயர்பதவி வகிப்பவர்கள் துறை சார்ந்தவர்களிடம் நற்பெயர் பெறுவார்கள். அரசு ஆஸ்பத்திரிகளில், கண்காணிப்பாளர்களாக பணிபுரிபவர்கள் பலவகை நிர்வாக சீர்கேடுகளை கண்டுபிடித்து அதனை சரிசெய்யும் தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வெற்றியும் பெறுவார்கள்.

கால்நடை பராமரிப்பு துறை சார்ந்த அரசு, அதிகாரிகளின் கால்நடைகளின் வளர்ச்சிக்கு தேவையான நெறிமுறைகளை உருவாக்கி அதனை தங்கள் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் சிறப்பாக செயல்படுத்துவார்கள். மின்சாரத்துறை அதிகாரிகள், அரசுக்கு வரவேண்டிய கடன் பாக்கிகளை கடுமையான முறையில் வசூல் செய்வார்கள். மனம் மிகுந்த சந்தோஷத்துடனும், பொருளாதார வரவுகள் தேவைக்கு தகுந்தாற்போலவும் சிரமம் இல்லாது கிடைக்கும். தனியார் துறையில் உள்ளவர்கள் வருமானம் கூடப்பெறுவர். சிற்றின்ப விஷயங்களில் மனம் அலைக்கழிக்கப்பட்டு பின்பு தெய்வ அருளால் நல்ல நிலைமை உருவாகும். புத்திரர்களால் சில இடையூறுகள் வந்து விலகும். பெண்களேடு எதிரித்தனத்தை வளர்த்துக்கொள்ளக்கூடாது. உத்தியோகம் சார்ந்த வெளியூர் பயணங்கள் உயர்வைத்தரும்.

தொழிலதிபர்களுக்கு..

மின்பொருள் உற்பத்தி செய்து விற்பனைக்கு அனுப்புபவர்கள் தொழிலி முன்னேற்றம் அடைவர். அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி, விற்பனையில் ஈடுபட்டுள்ளவர்கள் தொழிலில் ஏற்படும் போட்டிகளாலும் பொறாமைகளாலும் சில சிரமங்களை சந்திக்கும் வாய்ப்புகள் உள்ளதால் நிதானமாக செயல்பட்டு வருவது நல்லது. ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் உற்பத்தி செய்வோர் புதிய பணியாளர்களை நியமனம் செய்து உற்பத்தியில் முன்னேற்றம் காண்பர். பழங்கள், காய்கறிகள், உணவுப்பொருட்கள் மற்றும் இறைச்சி வகைகளை பதப்படுத்தி ஏற்றுமதி செய்யும் தொழிலதிபர்கள், பங்குகளில் கடன் பெற்று முன்னேற்றம் காண்பர். மனம் தைரியமாகவும், செயல்கள் உற்சாகமாகவும், நண்பர்களின் உதவியும் நிறையவே உண்டாகும். நோயற்ற வாழ்க்கையும், குடும்பத்தில் ஒற்றுமையும் திகழும். நினைத்த காரியங்கள் அனைத்தும் வெற்றிபெறும்.

வியாபாரிகளுக்கு..

உணவுப்பொருள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள் தங்கள் தொழிலில் இன்னும் மூலதனத்தை பெருக்கி முன்னேற்றம் காண்பார்கள். ஸ்டவ், கேஸ் அடுப்பு வியாபாரிகள் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள். சிலர் தங்கள் தொழில் சார்ந்த பாதுகாப்புக்காக சங்கம் போன்றவை வைத்து செயல்படும் வழிவகைகள் உண்டாகும். மனதில் புதிய நம்பிக்கைகளும், சமூகத்தில் தேவையான அந்தஸ்தும், தைரியமாக செயல்பாடுகளும் நல்ல பெயரை உருவாக்கும். சிறுதொழில் மூலமாக உற்பத்தி செய்ய்பபடும் உணவுப் பொருட்களை பெருமளவில் வாங்கி விற்பனை செய்து சாதனை நிகழ்த்துவார்கள். வியாபாரத்தின் மூலம் கிடைத்த லாபத்தினை தகுந்த இடங்களில் முதலீடு செய்து எதிர்கால வாழ்விற்கு பாதுகாப்பு தேடிக் கொள்வார்கள்.

மாணவர்களுக்கு..

மருத்துவம், ரத்த பரிசோதனை, எக்ஸ்ரே தொடர்பான கல்வி பயிலும் மாணவர்கள் படிக்கும் காலத்திலேயே எதிர்கால திட்டத்தை செயல்படுத்தும் விதத்தை, சமூக சூழ்நிலைகளை உணர்ந்து திட்டமிட்டு உருவாக்குவார்கள்.  விலங்கியல் துறை சார்ந்த மருத்துவப்படிப்பு பயிலும் மாணவர்கள் படிப்பில் முழு கவனம் செலுத்தி சிறப்பான தேர்ச்சி பெறுவார்கள். சக மாணவர்களால் படிப்பில் உதவியும், உறவினர்களால் மதிக்கப்பெறும்  நன்னிலைகளும் உருவாகும். கோயில்கள், வீடுகளில் பூஜை முறைகலுக்கு தேவையான சடங்குகளைப் பற்றிய குருகுல கல்வி பயிலும் மாணவர்கள் மிகுந்த அக்கறையுடன் படித்து ஆன்மீகப் பணிகளில் சிறந்து விளங்குவார்கள். புதிய வகை வாகன வாய்ப்புகள் உண்டாகும். ஆயுள் மற்றும் ஆரோக்கியம் பலம் தருவதாக இருக்கும்.

பெண்களுக்கு..

அரசுத்துறையில் பணிபுரிபவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையின் இலக்கை திறம்பட செய்து சிறப்பு பெறுவார்கள். காவல்துறை பணியிலுள்ளவர்கள் புதிய சலுகை பெறும் வகையில் பணியை நல்ல முறையில் அமைத்துக் கொள்வார்கள். விவசாய கூலி வேலை செய்பவர்கள், தீப்பெட்டி, பட்டாசு தொழிற்சாலை, உணவுப்பொருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை ஆகியவற்றில் பணிபுரிபவர்கள் சம்பள உயர்வு பெறுவர். தொழில்நுட்ப கல்வி பயின்று புதிதாக பணியில் ஈடுபட்டுள்ள பெண்கள் நல்ல வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். சிறு தொழில் நடத்துவோர் நல்ல வருமானம் பெறுவர். திருமண வயதை அடைந்தவர்கள் குருவின் அருளால் திருமணம் நடக்கும்  வாய்ப்பு பெறுவார்கள். தெய்வ வழிபாடுகளும், உறவுமுறை சார்ந்த பெண்களால் புதிய நட்புகளும் உருவாகும்.

கலைஞர்களுக்கு..

மண்பாண்டங்கள் உற்பத்தி செய்பவர்கள் தங்கள் கலை நுணுக்கத்தை வெளிப்படுத்தி புதிய வேலை வாய்ப்புகளை பெறுவார்கள். திரைத்துறை கலைஞர்கள் பொருளாதார முன்னேற்றம் பெறுவர்.  சிற்பக்கலைஞர்கள் வேலை வாய்ப்பும், பொருளாதார வசதியும் பெறுவார்கள். வீடு,  மனை, வாகனங்கள் போன்றவை உயர்வுதரும் வகையில் உருவாகும். நகைத் தொழில் செய்வோருக்கு இது நல்ல காலம். ஓவியர்கள் வேலை வாய்ப்பு பெறுவார்கள். உடல்நலமும், மனவளமும் மகிழ்ச்சிகரமாக இருக்கும்.

அரசியல்வாதிகளுக்கு..

அரசின் நல்ல திட்டங்களை ஆதரிக்கும் நிலையில் உள்ள மாற்றுக்கட்சி அரசியல்வாதிகள் தங்கள் கட்சி சார்ந்த நடவடிக்கைகளை வளர்த்துக் கொள்ளவும், சகல தரப்பின் ஆதரவும் கிடைக்கும். அரசியலில் ஈடுபட்டுள்ள பெண் அரசியல்வாதிகள் தங்களது ஆர்வம் மிக்க செயல்பாடுகளால் பொதுமக்களிடமும், நிர்வாக அமைப்பினரிடமும் நியாயமான பணி வாய்ப்புகளை நிறைவேற்றி நற்பெயர் பெறுவார்கள்.

அவிட்டம் 3, 4 பாதம்

பணவரத்து  அதிகரிக்கும். அதே நேரத்தில் செலவும் கூடும்.  எதிர்பார்த்த உதவிகள்  கிடைக்கும்.  துணிச்சல் உண்டாகும்.  எதை பற்றியும்  முன்பின் யோசிக்காமல் செயல்களில் இறங்கி  விடுவீர்கள். தேவையற்ற இடமாற்றம் உண்டாகலாம். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு  இருப்பவர்களுக்கு   கீழ்நிலையில்  உள்ளவர்களால் லாபம்  கிடைக்க பெறுவீர்கள்.  சரக்குகளை  பாதுகாப்பாக வைத்துக் கொள்வது நல்லது. 

சதயம்

உத்தியோகத்தில் இருப்பவர்கள்  எந்த ஒரு வேலையையும் செய்து முடிப்பதில் வேகம்  காட்டுவார்கள். சக ஊழியர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். குடும்பத்திற்கு தேவையான  பொருட்கள் வாங்குவதன்  மூலம் செலவு உண்டாகும். சகோதரர்கள் மூலம் உதவி கிடைக்கும். உறவினர்கள்  வருகை இருக்கும் அதே நேரத்தில் அவர்களுடன் வாக்குவாதம் செய்வதை  தவிர்ப்பது நல்லது. 

பூரட்டாதி 1, 2, 3  பாதம்

கணவன், மனைவிக்கிடையே   மனம்விட்டு பேசுவதன் மூலம்  கருத்து வேற்றுமை வருவதை தவிர்க்கலாம். பிள்ளைகளிம் அனுசரணையாக நடந்து கொள்வது  நன்மைதரும். துணிச்சலுடன் ஈடுபட்டு காரிய வெற்றி காண்பீர்கள். பணவரத்து திருப்தி தரும். வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மைதரும்.   மாணவர்களுக்கு மிகவும் கவனமாக எதிலும் ஈடுபடுவது நல்லது. கல்வியை பற்றிய கவலை நீங்கும். 

பரிகாரம்: சனிக்கிழமைகளில் சிவன் கோவிலை வலம் வரவும். 

சிறப்பான கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி

அனுகூலமான திசைகள்: மேற்கு - வடகிழக்கு - தென்கிழக்கு

அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 6

அதிர்ஷ்ட திசைகள்: கிழக்கு, வடக்கு

செல்ல வேண்டிய தலம்: திருநள்ளாறு, கும்பகோணம், திருத்தணி

சொல்ல வேண்டிய மந்திரம்: தினமும் அனுமன் சாலிசா சொல்லி ஆஞ்சநேயரை வழிபடவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com