மகரம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023

மனதிலிருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் மறைந்து தெளிவு உண்டாகும் இந்த சனிப்பெயர்ச்சியில்... 
மகரம் - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023
Published on
Updated on
2 min read

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

மனோதைரியம் கூடும். மனதிலிருந்த சஞ்சலங்களும் குழப்பங்களும் மறைந்து தெளிவு உண்டாகும். அடுத்தவர்களின் சூழ்ச்சிகளைத் தக்க தருணத்தில் புரிந்து கொள்வீர்கள். சிலருக்கு பல் உபாதைகள் தோன்றி மறையும். செய்தொழிலில் சீரிய முன்னேற்றம் உண்டாகும். நண்பர்களும், உங்கள் காரியங்களில் முழுமையாக ஒத்துழைப்பை நல்குவார்கள். அவர்களுக்குத் தேவையான உதவிகளையும் செய்து மகிழ்வீர்கள். வருமானமும் படிப்படியாக உயரத் தொடங்கும். 

உங்களது பேச்சில் வசீகரம் கூடும். உங்களின் உயர்ந்த பண்புகளுக்குப் புதிய அங்கீகாரம் கிடைக்கும். குடும்பத்தினரும் உங்கள் பேச்சுக்குக் கட்டுப்பட்டு நடப்பார்கள். சேமிப்புத் திட்டங்களில் சேர்வீர்கள். உங்கள் வாழ்க்கை முறை, வாழ்க்கைத் தரம் இரண்டும் மேம்படும். குழந்தைகளை விரும்பிய பாடப்பிரிவுகளில் சேர்ப்பீர்கள். அவர்களின் வளர்ச்சியைக் கண்டு பூரிப்படைவீர்கள்.  

ஏழரை நாட்டுச் சனியின் இறுதிப் பகுதியாக இருப்பதால் கடன் வாங்கி அசையாச் சொத்துகளை வாங்கலாம். செய்தொழிலில் புதிய முதலீடுகளைச் செய்யலாம். இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளும் நடந்தேறும். சமுதாயத்தில் உயர் பொறுப்பில் இருப்பவர்களுடன் பழகும்போது எச்சரிக்கையுடன் பழகிவரவும். வழக்கு சார்ந்த பணிகளில் எதிர்பாராத முடிவு கிடைக்கும்.

உத்தியோகஸ்தர்கள்:  முன்னேற்றங்களுக்குத் தடையாக இருப்பவர்களைக் கண்டறிந்து விலக்குவீர்கள்.  அலுவலகப் பணிகளில் வேலைப் பளு அதிகரிக்கும். இருப்பினும், ஊதிய உயர்வில் சற்று குறைவான மாற்றமே உண்டாகும். எவருக்கும் முன்ஜாமீன் போட வேண்டாம்.

வியாபாரிகள்: உங்களின் சமயோஜித புத்தியால் சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு பொருள்களின் விலையை நிர்ணயித்து போட்டியாளர்களைச் சமாளிப்பீர்கள். வியாபாரத்தைப் பெருக்க புதிய வாகனங்களை வாங்குவீர்கள்.

விவசாயிகள்: விளைபொருள்களால் லாபம் அடைவீர்கள். நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்க எடுத்த முயற்சிகள் நன்மையளிக்கும். புதிய குத்தகைகள் உங்களை நாடி வந்தாலும் எடுக்க வேண்டாம். வயல் வரப்பு சண்டைகளில் ஈடுபட வேண்டாம்.  குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும்.
அரசியல்வாதிகள்: பதவிக்கு நெருங்கிய நண்பர்களால் இடையூறு உண்டாகும். அவர்களின் ரகசிய திட்டங்களைச் சாதூர்யத்துடன் சமாளிப்பீர்கள். தொண்டர்களால் அனுகூலம் உண்டாகும்.

கலைத்துறையினர்: பணவரவு மிகுதியாகவே இருக்கும். கை நழுவிப் போன ஒப்பந்தங்கள் திரும்பக் கிடைக்கும். உங்கள் திறமைகள் பளிச்சிடும். சக கலைஞர்களால் ஆதாயம் அடைவீர்கள். தொழில் முன்னேற்றம் இருக்கும்.
பெண்கள்: குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். பண வரவு சீராக இருப்பதால், ஆடம்பரப் பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். குடும்பத்தில் மழலையின் வரவால் குதூகலம் அடைவீர்கள். தேக ஆரோக்கியம் சீராகவே இருக்கும்.

மாணவர்கள்: தேர்வில் நிறைய மதிப்பெண்களைப் பெறுவீர்கள். சக நண்பர்களுடன் ஒற்றுமையுடன் வலம் வருவீர்கள். ஆசிரியர்களின் ஆதரவும் கிடைக்கும். இனிமையான புத்தாண்டாக அமையும்.

பரிகாரம்: அம்மன் தரிசனம் உகந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com