தனுசு - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023

தனுசு ராசியை பொறுத்தவரை இந்த சனிப்பெயர்ச்சியில் உங்களின் நடை, உடை, பாவனைகளில் ஒரு வேகம் உண்டாகும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். 
தனுசு - சனிப் பெயர்ச்சி பலன்கள் 2023
Published on
Updated on
2 min read

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

உங்கள் முயற்சிகளை மற்றவர்களின் உதவியின்றி தனித்து செயல்படுத்தி வெற்றி பெறுவீர்கள். தன்னம்பிக்கையுடன் பேசுவீர்கள். உங்களின் நடை, உடை, பாவனைகளில் ஒரு வேகம் உண்டாகும். உங்கள் கருத்துகளை அடுத்தவர்கள் கவனத்துடன் பரிசீலிப்பார்கள். வருமானம் பெருமளவுக்கு வந்து கொண்டிருக்கும்.  

பெற்றோருக்கு சிறிது மருத்துவச் செலவு உண்டாகும். பழைய கடன்களையும் நயமாகப் பேசி வசூலிப்பீர்கள். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். சிலருக்கு மறைமுக விமர்சனங்களும் ஏற்பட்டு நீங்கும். சுபகாரியம் தொடர்பான பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். குடும்பத்துடன் புனித தலங்களுக்கும் சென்று வருவீர்கள்.

புத்துணர்ச்சியான சிந்தனைகளின் மூலம் மகிழ்ச்சியான சூழ்நிலையை உருவாக்கிக் கொள்வீர்கள். அனைவருடனும் நல்லுறவு வைத்துக் கொள்ள எடுக்கும் முயற்சிகள் ஜெயமுண்டாகும். உங்கள் செயல்களில் சில சமயங்களில் தொடர்ந்து கடும் போட்டிகள் நிலவும்.   

உத்தியோகஸ்தர்கள்: இயந்திர வாழ்க்கையிலிருந்து விடுபட்டு சிந்தனைகளுக்கும் செயல்வடிவம் கொடுப்பீர்கள். முன்னேறத் தடையாக இருப்பவர்களைக் கண்டு விலக்கி விடுவீர்கள். மேலதிகாரிகளின் ஆதரவோடு பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் அலுவலக வேலைகளில் பளு கூடினாலும் அவைகளைச் சமார்த்தியமாகச் சமாளித்துவிடுவீர்கள். புதிய வண்டி, வாகனச் சேர்க்கை உண்டாகும். 

வியாபாரிகள்: வியாபாரத்தில் வளர்ச்சியைக் காண்பீர்கள். தொடர்ந்து வந்த தடைகள் நீங்கி, வெற்றி கிடைக்கும்.  கூட்டாளிகளின் ஆதரவு பெருமளவுக்கு இருப்பதால் கூட்டுத் தொழில் சிறப்பாக இருக்கும். புதிய முதலீடுகள் செய்து வியாபாரத்தை விரிவுபடுத்துவீர்கள். இக்காலக்கட்டத்தில் கொடுக்கல், வாங்கலில் அனுகூலமான திருப்பங்களைக் காண்பீர்கள்.

விவசாயிகள்:  நீர்வரத்து அதிகமாக இருப்பதால் பாசன வசதிகளிலும் கவனம் செலுத்துவீர்கள்.  விளைச்சல் நன்றாகவே இருக்கும். உங்களுக்கு நியாயமாக வர வேண்டிய பணம் தானாகவே கைக்கு வந்து சேரும். 

அரசியல்வாதிகள்: நெருக்கடியான சூழ்நிலைகளிலிருந்து தப்பித்துவிடுவீர்கள். உங்களுக்குத் தொந்தரவு கொடுத்தவர்கள் நண்பர்களாகவே மாறிவிடுவார்கள்.  திட்டமிட்ட உங்கள் பணிகள் யாவும் குறித்த இலக்குகளை அடைந்துவிடும். நெடுநாளைய லட்சியம் பூர்த்தியாகும்.

கலைத்துறையினர்:  புதிய ஒப்பந்தங்களைத் திறம்பட முடித்து உங்களது திறமையை அனைவரும் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். பணவரவு பெருகும். புகழைத் தக்க வைத்துக் கொள்வீர்கள்.

பெண்கள்: குடும்பத்தில் அனுகூலமான நிலைமைகளைக் காண்பீர்கள். உடல் ஆரோக்கியம் சிறப்பாகவே இருக்கும். ஆடை, ஆபரணங்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவியரிடையே சுமுகமான உறவு தொடரும்.

மாணவர்கள்: பெற்றோரையும் ஆசிரியர்களையும் மதித்து நடந்து நற்பெயரை எடுப்பீர்கள். தேக ஆரோக்கியம் சீரடையும். மனதை ஒருநிலைப்படுத்தி தியானம் மேற்கொள்வீர்கள். படிப்பில் மிகுந்த கவனத்துடன் ஈடுபடுவீர்கள். ஒரு குதூகலமான ஆண்டாகவே அமையும்.

பரிகாரம்: ஸ்ரீமுருகரை வழிபடவும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.