திருமலையில் ரத சப்தமி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

தை மாதம் வளா்பிறை சப்தமி நாளான ரத சப்தமி சூரிய பகவான் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது.
திருமலையில் ரத சப்தமி: ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

திருமலையில் ரத சப்தமி விழா இன்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

திருமலையில் ஆண்டுதோறும் தை மாதம் வளா்பிறை சப்தமி நாளான ரத சப்தமி சூரிய பகவான் பிறந்த நாளாகக் கொண்டாடப்படுகிறது. அதன்படி, ஒரு நாள் பிரம்மோற்சவமான ரத சப்தமி இன்று திருமலையில் நடைபெற்றது. ஒரே நாளில் 7 வாகனங்களில் மலையப்பசாமி மாடவீதிகளில் வலம் வந்து பக்தக்ரளுக்கு அருள்பாலிப்பது இந்த விழாவின் சிறப்பாகும்.

காலை 5.30 முதல் 8 மணி வரை (சூரிய உதயம் காலை 6.40 மணி) - சூரிய பிரபை வாகனம், காலை 9 மணி முதல் 10 மணி வரை - சின்ன சேஷ வாகனம், காலை 11 மணி முதல் 12 மணி வரை - கருட வாகனத்திலும், மதியம் 1 மணி முதல் 2 மணி வரை - ஹனுமந்த வாகனத்திலும் அருள்பாலிக்கிறார்.

தொடர்ந்து மதியம் 2 முதல் 3 மணி வரை - தீா்த்தவாரி, மாலை 4 முதல் 5 மணி வரை - கல்ப விருட்ச வாகனத்திலும், மாலை 6 முதல் 7 வரை - சா்வபூபால வாகனத்திலும், இரவு 8 முதல் 9 மணி வரை - சந்திரபிரபை வாகனத்திலும் உற்சவம் நடைபெற உள்ளது.

மலையப்ப சுவாமி வலம் வரும் மாட வீதிகளில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.

கோயிலில் நடைபெறும் கல்யாணோற்சவம், ஊஞ்சல் சேவை, ஆா்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சஹஸ்ர தீபாலங்கார சேவை உள்ளிட்டவற்றை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com