இன்று அமோகமான நாள்!

இன்றைய நாள் யாருக்கெல்லாம் அதிர்ஷ்டத்தைத் தரும் எனத் தெரிந்துகொள்வோம்.
இன்று அமோகமான நாள்!
Updated on
2 min read

12 ராசிக்கான தினப்பலன்களை தினமணி இணையதளத்தின் ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் துல்லியமாகக் கணித்து வழங்கியுள்ளார்.

மே-10, 2024 (வெள்ளிக்கிழமை)

மேஷம்

இன்று நீங்கள் செய்யும் காரியங்களுக்கு எல்லா தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப்படாமல் செயலாற்றுவீர்கள். தொழில் தொடர்பான பிரச்சனைகள் நீங்கும். திறமை வெளிப் படும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குடும்பத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான உறவு காணப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஊதா

அதிர்ஷ்ட எண்: 5, 6

ரிஷபம்

இன்று புதிய முயற்சிகளில் ஈடுபடும் முன் தகுந்த ஆலோசனைகளை எடுத்துக் கொள்வது அவசியம். வீண் அலைச்சலும், காரிய தடையும் ஏற்படலாம் கவனம் தேவை. எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் ஏற்படலாம். பார்ட்னர்களை அனுசரித்து செல்வது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: வயலட், வெண்பட்டு

அதிர்ஷ்ட எண்: 1,2

மிதுனம்

இன்று இருந்து வந்த எதிர்ப்புகள் நீங்கும். பகைகள் விலகும். அடுத்தவர்களால் இருந்த பிரச்சனைகள் சரியாகும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். எல்லாவசதிகளும் கிடைக்கும். தர்மசிந்தனை அதிகரிக்கும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். எதிலும் நிதானம் தேவை. புதிய ஆர்டர்கள் கிடைப்பது தாமதப்படும்.

அதிர்ஷ்ட நிறம்: வெளிர் நீலம், கரும்பச்சை

அதிர்ஷ்ட எண்: 2, 9

கடகம்

இன்று கடன் கொடுக்கும் போது கவனம் தேவை. வாகன வசதி உண்டாகும். அடுத்தவர்களிடம் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நன்மை தரும் தொழில் வியாபாரம் சிறப்படையும். புதிய ஆர்டர்கள் கிடைக்க பெறுவீர்கள். வியாபார வளர்ச்சிக்கு இருந்த தடைகள் நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாகும். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் பதவிஉயர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 4, 6

சிம்மம்

இன்று நீண்ட தூர பயணங்களால் காரிய அனுகூலம் உண்டாகும். சக பணியாளர்கள் மூலம் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். குடும்பத்தில் உற்சாகம் இருக்கும். மற்றவர்கள் உங்களை அனுசரித்து செல்வார்கள். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சியான நிலை காணப்படும். பிள்ளைகள் கல்வியிலும் மற்ற வகையிலும் சிறந்து விளங்குவார்கள். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, வெளிர்பச்சை

அதிர்ஷ்ட எண்: 4, 6

கன்னி

இன்று பிள்ளைகள் துணையால் மருத்துவ செலவு ஏற்படலாம். பேச்சின் இனிமை சாதூரியத்தால் எளிதில் காரியங்கள் கைகூடும். எதிர்காலத்துக்கு உதவக்கூடிய விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். ஆன்மீக சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் உயர்வு உண்டாகும். மனதில் இருந்த குழப்பம் நீங்கி தைரியம் ஏற்படும். போட்டிகளில் பங்கு பெற ஆர்வம் உண்டாகும்.

அதிர்ஷ்ட நிறம்: ஊதா, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 9,3

துலாம்

இன்று தொழில் வியாபாரத்தில் மந்தமான போக்கு காணப்பட்டாலும் பணவரத்து குறைவு இருக்காது. தொழில் கூட்டாளிகளுடன் அனுசரித்து செல்வது நன்மைதரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை கவனிப்பது நல்லது. வீண் அலைச்சலும் கூடுதல் உழைப்பும் இருக்கும்.

அதிர்ஷ்ட நிறம்: கருநீலம், பச்சை

அதிர்ஷ்ட எண்: 3, 7

விருச்சிகம்

இன்று குடும்பத்தில் வீண் குழப்பம் ஏற்பட்டு அதனால் நிம்மதி குறையலாம். வாழ்க்கை துணையின் பேச்சை கேட்டு நடக்க வேண்டி இருக்கும். கவுரவம் அந்தஸ்து உயரும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கவனமாகவும் கடினமாகவும் உழைப்பது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

அதிர்ஷ்ட நிறம்: அடர்பச்சை, நீலம்

அதிர்ஷ்ட எண்: 5, 6

தனுசு

இன்று வீண் அலைச்சலும், காரிய தடையும் ஏற்படலாம் கவனம் தேவை. குல தெய்வத்தை பூஜித்து வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். மனவருத்தம் நீங்கும். மனோதைரியம் அதிகரிக்கும். எல்லாகாரியங்களும் சாதகமாக நடந்து முடியும். பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது. எதிர்பாராத செலவுகள் வரலாம்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்

அதிர்ஷ்ட எண்: 4, 5

மகரம்

இன்று எல்லா இடங்களிலும் மரியாதையும், கவுரவமும் அதிகரிக்கும். எல்லாதரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும். நன்மை தீமைகளை பற்றி கவலைப் படாமல் தலை நிமிர்ந்து நடப்பார்கள். தொழில் வியாபாரம் முன்னேற்ற மடையும். போட்டிகள் குறையும். தொழில் தொடர்பான தகராறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், ஆரஞ்சு

அதிர்ஷ்ட எண்: 1, 7

கும்பம்

இன்று விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். எதிர்பார்த்த லாபம் கிடைக்க பெறுவீர்கள். கடன் பிரச்சனை தீரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நிர்வாக திறமை வெளிப்படும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். எழுத்து தொழிலில் இருப்பவர்கள் முன்னேற்றம் அடைவார்கள்.

அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, பழுப்பு

அதிர்ஷ்ட எண்: 2, 3

மீனம்

இன்று ஆன்மீக பயணம் செல்வதில் விருப்பம் உண்டாகும்.குடும்பத்தில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடக்கும். திருமணம் தொடர்பான பேச்சு வார்த்தை சாதகமான பலன் தரும். கணவன், மனைவிக்கிடையே சந்தோஷம் நிலவும். பிள்ளைகளுக்காக செய்யும் பணிகள் திருப்தி தரும். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுடன் இருந்த தகராறுகள் நீங்கும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை, கருநீலம்

அதிர்ஷ்ட எண்: 5

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com