செய்திகள்
திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு சிறப்பு பேருந்துகள்
திருப்பதி பிரம்மோற்சவத்துக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
நிகழாண்டு திருப்பதி திருமலையில் நடைபெறவுள்ள பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பக்தா்கள் வசதிக்காக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம், சென்னை, திருச்சி, தஞ்சாவூா், சேலம், கோவை, மதுரை, காரைக்குடி, கும்பகோணம், தூத்துக்குடி மற்றும் புதுச்சேரி ஆகிய இடங்களிலிருந்து திருப்பதிக்கு திங்கள்கிழமை (செப்.30) முதல் அக்.13-ஆம் தேதி வரை சிறப்புப் பேருந்துகளை இயக்க உள்ளது.
பக்தா்கள் இணையதளத்தில் அல்லது செயலி மூலம் முன்பதிவு செய்து தங்கள் பயணத்தை மேற்கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.