
ஆற்காட்டில் பல ஆண்டுகள் பழமையான கங்காதர ஈஸ்வர ஆலயத்தில் தேரோட்டத் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.
ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு அருகே, மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு கங்காதரேஸ்வரர் வரதராஜ பெருமாள் ஆலயத்தில் பிரம்மோற்சவம் கடந்த 30ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பிரம்மோற்சவ நிகழ்வின் இறுதியாக தேரோட்டத் திருவிழா இன்று நடைபெற்றது. முன்னதாக வண்ண மலர்களால் அலங்கரித்து வைக்கப்பட்ட உற்சவருக்கு மேளதாளம் முழங்கச் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது.
தொடர்ந்து சுவாமியைப் பக்தர்கள் தோளில் சுமந்தபடி தூக்கிவரப்பட்டு திருத்தேரில் வைத்து, தீபாராதனை காட்டிய பின்பு, பக்தர்கள் தேரினை வடம் பிடித்து அரோகரா அரோகரா கோஷத்துடன் இழுத்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.