கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு

நாகேஸ்வரர் ஆலய தேரோட்டத்தில் ஏராளமானோர் வடம் பிடித்து இழுத்தனர்..
நாகேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம்
நாகேஸ்வரர் ஆலயத்தில் தேரோட்டம்
Published on
Updated on
1 min read

பங்குனி உத்திர பெருவிழாவின் ஒரு பகுதியாக இன்று கும்பகோணம் நாகேஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமானோர் பங்கேற்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள பழமையான சிவாலயங்களில் ஒன்றானதும், நாவுக்கரசரால் தேவாரப் பாடல் பதிவு பெற்ற சிவாலயங்களில் ஒன்றாகவும் விளங்குவது நாகேஸ்வரர் திருக்கோயில். இந்த ஆலயத்தில் நடைபெறும் முக்கிய விழாவாக பங்குனி உத்திர திருவிழா விளங்குகிறது.

நாகேஸ்வரர் ஆலயத்தில் கடந்த இரண்டாம் தேதி பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் இன்று நடைபெற்றது.

தேரில் நாகேஸ்வரர் மற்றும் பெரியநாயகி அம்மன் ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்குக் காட்சி அளித்தனர். தேரோட்டத்தில் ஏராளமானோர் கலந்துகொண்டு தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை Dinamani APP பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Open in App
Dinamani
www.dinamani.com