ஒடிஸா மாநிலத்தில் நடைபெறும் புகழ்பெற்ற புரி ஜெகந்நாதரின் வருடாந்திர யாத்திரை நாளை(ஜூலை 16) கோலாகலமாகத் தொடங்கவுள்ளது.
ஒடிஸா மாநிலம், புரியில் 12-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த ஜெகந்நாதா் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் ரத யாத்திரை பிரசித்தி பெற்றதாகும். நிகழாண்டு ரத யாத்திரை வியாழக்கிழமை தொடங்க உள்ளது.
புரி கடற்கரை நகரத்தில் கலை நயத்துடன் அலங்கரிக்கப்பட்ட மூன்று பிரம்மாண்ட ரதங்களில் எழுந்தருள்வதற்காக, ஜெகந்நாதா், அவரது அண்ணன் பாலபத்திரா், தங்கை தேவி சுபத்திரை ஆகிய மூவரின் மரச்சிற்பங்கள் கோயிலில் இருந்து வேத மந்திரங்கள்-மேளதாளங்கள்-சங்கொலி முழங்க வெளியே எடுத்துவரப்பட்டு, முக்கிய வீதியில் அணிவகுத்துச் செல்லும். இந்த மாபெரும் நிகழ்வைச் சுமூகமாக நடத்த ஒடிஸா அரசு முழு வீச்சில் தயாராகி வருகிறது.
ஸ்ரீ ஜெகந்நாதர் கோயில் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி கூறுகையில்,
வீதியுலா வரும் மூன்று தெய்வங்களின் தேர்களின் கட்டுமான மற்றும் அலங்காரப் பணிகள் நிறைவடைந்துவிட்டன. இத்தேர்கள் பலத்த பாதுகாப்பு வளையத்திற்குள் கோயிலுக்கு முன்னால் உள்ள முக்கிய வீதியில் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்தியா, வெளிநாடுகளில் இருந்து வரும் லட்சக்கணக்கான பக்தர்கள் வியாழக்கிழமையன்று தேர்கள் இழுக்கப்படுவதைக் காண உள்ளனர். ஒடிஸா காவல்துறையுடன் மத்திய ஆயுதப் படை, இந்தியக் கடற்படை, கடலோரக் காவல் படை மற்றும் பல்வேறு அரசுத் துறைகளும் இந்தப் பணிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்த மாபெரும் நிகழ்வை வெற்றிகரமாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. சுமார் 13,000 காவலர்கள், மத்திய ஆயுதப் படையினர் (சுமார் 1,500 வீரர்கள் - இதில் என்எஸ்ஜி, ஆர்ஏஎஃப் கமாண்டோக்கள், சிஆர்பிஎஃப், பிஎஸ்எஃப் வீரர்கள் அடங்குவர். இவர்கள் ஏற்கெனவே பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் கடற்கரைப் பகுதியில் 500 உயிர்காப்பாளர்களும் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
காவல் துறை ட்ரோன்கள், நாசவேலை தடுப்புக் குழுக்கள், வெடிகுண்டு நிபுணர் குழுக்கள், மோப்ப நாய் படைகளும் பணியமர்த்தப்பட்டுள்ளன.
காவல் துறை ட்ரோன்கள், நாசவேலை தடுப்புக் குழுக்கள், வெடிகுண்டு நிபுணர் குழுக்கள், மோப்ப நாய் படைகளும் பணியமர்த்தப்பட்டுள்ளன.
இதற்கிடையில், புரியில் கனமழை மற்றும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளதைக் கருத்தில் கொண்டு, 'கிராண்ட் ரோடு' பகுதியிலிருந்து மழைநீரை வெளியேற்றச் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
புரியில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் 143.8 மி.மீ மழைப் பதிவாகியுள்ளது. வானிலை முன்னறிவிப்பைக் கருத்தில் கொண்டு, புரி மாவட்ட நிர்வாகம் புதன்கிழமையன்று தனியார்ப் பள்ளிகள் உள்பட அனைத்துப் பள்ளிகளையும் மூடியுள்ளது.
ஒடிஸா அரசு சுமார் 800 பேருந்துகளை ஏற்பாடு செய்துள்ளது. அதேவேளையில், இந்திய ரயில்வே புரிக்கு 300-க்கும் மேற்பட்ட ரயில்களை இயக்கவுள்ளது இவ்வாறு அவர் கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










