ரஜினி அழைத்தும் மறுப்பு தெரிவித்து பாஜகவில் இணைந்தேன்! அண்ணாமலைஅரசுப் பத்திரங்களில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு முழு வரி விலக்கு! மத்திய அரசு தாம்பரத்தில் சிக்னல் கோளாறு! நடுவழியில் நிறுத்தப்பட்ட மின்சார ரயில்கள்! பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!காயிதே மில்லத் நினைவிடத்தில் முதல்வர் விஜய் மரியாதை! முதல்வா் விஜய் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் தொடங்கியது! பெரம்பூர் ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத ஆண் சடலம்! உலகின் முதல் 4 நாடுகளில் இந்தியா! ரஷிய அதிபர்தரிசன டிக்கெட்டில் மோசடி, முறைகேடு புகாா்கள்: திருச்செந்தூா் முருகன் கோயில் ஆணையா்கள் இடமாற்றம்மாநிலங்களவைத் தோ்தல்: பெங்களூரில் மல்லிகாா்ஜுன காா்கே இன்று வேட்புமனு தாக்கல்ஈரான் அணுசக்தி திட்டம் குறித்து ரகசிய தகவல் அமெரிக்காவிடம் பகிா்வு? -பாகிஸ்தான் மறுப்புஇந்தியா-வெனிசுவேலா இடையே நீண்ட கால எரிசக்தி ஒத்துழைப்பு: பிரதமா் மோடி, அதிபா் டெல்சி உறுதி2026 குடிமைப் பணிகள் முதல்நிலைத் தோ்வில் முக அங்கீகார முறை வெற்றிகரமாக அமல்: யுபிஎஸ்சிபுதிய இயக்கத்தை இன்று அறிவிக்கிறாா் அண்ணாமலைஓஎஸ்எம் முறையை அவசரகதியில் சிபிஎஸ்இ நடைமுறைப்படுத்தியுள்ளதாக பெற்றோா் சங்கம் புகாா் நீலகிரி, கோவை, கன்னியாகுமரி மாவட்டங்களுக்கு ‘ஆரஞ்சு’ எச்சரிக்கைபராமரிப்புப் பணி: வைகை உள்பட 7 விரைவு ரயில்கள் தாமதமாகும்
/

மதுரை வீரகாளியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா!

மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவில் நேர்த்திக் கடன் செலுத்திய பக்தர்கள்..

News image

பங்குனித் திருவிழா

Updated On :5 ஜூன் 2026, 11:52 am IST

மதுரை வீரகாளியம்மன் கோயில் பங்குனி திருவிழாவையடுத்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடம், பறவை காவடி, தேர் காவடி எடுத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மதுரை மாநகர் ஜெய்ஹிந்த்புரத்தில் மிகப் பழமையான ஸ்ரீ வீரகாளியம்மன் கோவில் உள்ளது, இந்த கோவிலின் 74 ஆவது ஆண்டு வைகாசி உற்சவ விழா தொடங்கி நடைபெற்றுவருகிறது. காப்பும் கட்டும் நிகழ்வுடன் தொடங்கிய இவ்விழாவில் நாள்தோறும் அம்மனுக்கு தினமும் காலை, மாலை சிறப்புப் பூஜைகள் நடைபெற்றது,

இந்நிலையில், விழாவின் சிகர நிகழ்வாக இன்று காலை 5 மணி முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வைகை ஆற்றிலிருந்து தங்களது வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோயிலுக்கு அலகு குத்தியும், பால் குடம் எடுத்தும், வேல் குத்தியும், பறவை காவடி எடுத்தபடியும் வைகை ஆற்றிலிருந்து ஜெய்ஹிந்த் புரம் வரை ஊர்வலமாகச் சென்றனர்.

இதில் 10,000 மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் எடுத்தும், 5,000 மேற்பட்டோர் பக்தர்கள் வேல் குத்தியபடியும், 50க்கும் மேற்பட்ட 5 அடுக்கு, 3 அடுக்கு என 50 அடி முதல் 30 அடி வரை பறவை காவடி, தேர் காவடி, பால்காவடி, எடுத்தும் தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்தினார்கள், 15ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு ஊர்வலமாகச் சென்றதால் மாநகர் சாலைகள் முழுவதிலும் திருவிழாக் கோலம் பூண்டது.

இந்த விழாவினை தொடர்ந்து நாளை ஊர்ப் பொங்கல், அக்னி சட்டி, முளைப்பாரி ஊர்வலம், 3 ஆம் தேதி திருவிளக்கு பூஜையும் நடைபெறுகிறது

Summary

Following the Panguni festival at the Madurai Veera-Kaliyamman Temple, thousands of devotees fulfilled their vows by carrying milk pots (*paalkudam*), *Paravai Kavadi*, and *Ther Kavadi*.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.