ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயிலில் கருட சேவை உற்சவம் இன்று(மே 3) நடைபெற்றது. கருட வாகனத்தில் எழுந்தருளிய பெருமாளை வழியெங்கும் பக்தர்கள் தீபாராதனை செய்து வழிபட்டனர்.
108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும் பரமபத வாசல் கொண்ட திருத்தலமான ஸ்ரீ புஷ்பவல்லி தாயார் சமேத ஸ்ரீ அஷ்டபுஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நேற்று முன் நாள் கோயிலில் சித்திரை மாத பெருவிழா பிரம்மோற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனைத் தொடர்ந்து, காலை மற்றும் மாலை என இருவேளைகளிலும் உற்சவர் மலர் அலங்காரத்தில் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளினார்.
உற்சவத்தின் மூன்றாம் நாளான இன்று காலை, அஷ்டபுஜ பெருமாளுக்கு பல்வேறு மலர்கள் அலங்கரிக்கப்பட்டு, ரோஸ் நிற பட்டுடுத்தி, திரு ஆபரணங்கள் அணிந்து கருட சேவை உற்சவத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
கோயிலில் இருந்து புறப்பட்ட கருட சேவை, ரங்கசாமி குளம், டி.கே. நம்பி தெரு, செட்டி தெரு, வரதராஜ பெருமாள் கோயில் மாட வீதி வழியாக வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.
வழியெங்கும் பக்தர்கள் தீப ஆராதனை காண்பித்து வழிபட்டனர்.
Summary
The Garuda Sevai festival was held today (May 3) at the Sri Ashtabhuja Perumal Temple, accompanied by Sri Pushpavalli Thayar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கீழையூா் பெருமாள் கோயில் ஊஞ்சல் உற்சவம்

காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோயிலில் தேரோட்டம்

கருட வாகனத்தில்...

ஸ்ரீனிவாச பெருமாள் கோயில் பிரம்மோற்சவ கருட சேவை
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!




