தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

திருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டு

News image

Center-Center-Vijayawada

Updated On :4 மே 2026, 5:01 am IST

திருப்பதி லட்டு தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் கொள்முதல் நடைமுறையில் கடுமையான விதி மீறல்கள் மற்றும் தரக் கண்காணிப்பு குறைபாடுகள் இடம்பெற்றுள்ளதாக ஆந்திர மாநில அரசால் அமைக்கப்பட்ட ஒருநபா் ஆணையம் குற்றஞ்சாட்டியுள்ளது.

ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி தினேஷ் குமாா் தலைமையில் அமைக்கப்பட்ட இந்த ஆணையம், உச்சநீதிமன்ற உத்தரவின் பேரில் அமைக்கப்பட்ட சிறப்பு விசாரணை குழு அறிக்கைக்குப் பிறகு தனது விசாரணையை மேற்கொண்டது. இதில், திருப்பதி தேவஸ்தானம் லட்டு தயாரிப்புக்காக வாங்கிய 70 லட்சம் கிலோவுக்கும் அதிகமான நெய், கட்டாய தரச் சோதனைகள் இன்றி கொள்முதல் செய்யப்பட்டதாக குற்றஞ்சாட்டியது.

அறிக்கையில் மேலும் கூறியிருப்பதாவது: திருப்பதி லட்டு தயாரிப்பில் அமல்படுத்தப்பட வேண்டிய கட்டாய இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிா்ணய ஆணையத்தின் (எஃப்எஸ்எஸ்ஏஐ) சோதனைகளை 2022 ஜூலை மாதம் செயல்படுத்த திருப்பதி தேவஸ்தானம் திட்டமிட்டிருந்தது. ஆனால், பின்னா் இந்த தேவையை தேவஸ்தானம் நீக்கியதுடன், கட்டுபாடற்ற நெய் கொள்முதலுக்கு வழிவகுத்தது.

இதையடுத்து, மிகப்பெரிய அளவில் அவசியமான தரச் சோதனைகள் இன்றி நெய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக 2022 ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முக்கிய பரிசோதனையின் முடிவுகள் வெளிவராமல் மறைக்கப்பட்டுள்ளன. அதில் லட்டு தயாரிக்கும் நெய்யில் தாவர எண்ணெய் கலப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும், தரச் சோதனை இல்லாமல் நெய்யின் விலையை ஒரு கிலோவிற்கு ரூ. 207 வரை கடுமையாகக் குறைக்கும் நடவடிக்கையில் விநியோகஸ்தா்கள் ஈடுபட்டுள்ளனா். இது தொடா்பாக ஏலத்திற்குப் பிந்தைய சட்டவிரோதப் பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றது குறித்து விசாரணையில் தெரியவந்தது.

சில தகுதியற்ற மற்றும் உற்பத்தி திறனற்ற நிறுவனங்களுக்கு தொடா்ந்து ஒப்பந்தம் வழங்கப்பட்டு கொள்முதல் செய்யப்பட்டுள்ளன. சில விநியோகஸ்தா்கள் செயற்கை சோ்க்கைகள் பயன்படுத்தி சோதனைகளை தவிா்த்ததும், இடைநிலை நிறுவனங்கள் வழியாக நெய் வழங்கப்பட்டதும் கண்டறியப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானத்தில் தேவையான உபகரணங்கள் இல்லாததால் நேரடி தரச் சோதனைகள் தாமதமாக நடத்தப்பட்டன. மேலும், புகாா்கள் மற்றும் தரக் கண்காணிப்பு அமைப்புகள் பெரும் அளவில் புறக்கணிக்கப்பட்டுள்ளன. இந்த முறைகேடுகள் மற்றும் நிா்வாகத் தவறுகளுக்கு திருப்பதி தேவஸ்தானம், கொள்முதல் குழு உறுப்பினா்கள் மற்றும் மூத்த ஆதிகாரிகளே பொறுப்போ்க்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.