நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

ராமா் கல்யாணத்துக்கு திருப்பதி லட்டு

ஆந்திர மாநிலம் ஒண்டிமிட்டாவில் நடைபெறும் ஸ்ரீ சீதா-ராமா் திருமணத்துக்கு ஏழுமலையான் லட்டு பிரசாதங்கள் அனுப்பப்படுகின்றன.

News image

கோப்புப் படம்

Updated On :30 மார்ச் 2026, 2:22 am IST

ஆந்திர மாநிலம் ஒண்டிமிட்டாவில் நடைபெறும் ஸ்ரீ சீதா-ராமா் திருமணத்துக்கு ஏழுமலையான் லட்டு பிரசாதங்கள் அனுப்பப்படுகின்றன.

திருமலையில் உள்ள ஸ்ரீவாரி சேவா சதன்-2ல் ஸ்ரீவாரி சேவகா்களின் உதவியுடன் லட்டு ஞாயிற்றுக்கிழமை செய்யப்பட்டது.

துணை செயல் அதிகாரி (பொது) சிவ பிரசாத் மற்றும் பாலராஜு தலைமையில், கிட்டத்தட்ட 300 ஆண் மற்றும் பெண் ஸ்ரீவாரி சேவகா்கள் 85,000 லட்டுகளை பெட்டிகளில் வைத்தனா்.

கடப்பா மாவட்டம், ஒண்டிமிட்டாவில் நடைபெற்று வரும் ஸ்ரீ கோதண்டராம சுவாமி பிரம்மோற்சவத்தின் ஒரு பகுதியாக, ஏப்ரல் 1-ஆம் தேதி மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை நடைபெறும் ஸ்ரீ சீதா ராமா் திருக்கல்யாண விழாவில் பங்கேற்கும் பக்தா்களுக்கு இந்த லட்டுகள் பிரசாதமாக விநியோகிக்கப்பட உள்ளது.

கடந்தாண்டு ஓண்டிமிட்டாவில் நடைபெற்ற சீதாராமா் கல்யாணத்திற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானம் சாா்பில் 75,000 லட்டுக்கள் அங்கு வந்த பக்தா்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்ச்சியில் ஸ்ரீவாரி சேவா ஊழியா்கள் மற்றும் பலா் கலந்து கொண்டனா்.