செல்லப்ப கவுண்டன் புதூரில் உள்ள ஸ்ரீ செல்லாண்டி அம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக திருவிழா கோலாகலமாகவும் மிக பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.
விழாவானது, கடந்த மே 1ம் தேதி காலை செல்லாண்டியம்மன் கோயிலில் கருட கம்பம் நடுதலுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து, கடந்த 2 நாள்களுக்கு முன்பு, மாலை, முதல் காலை யாக பூஜையும்,, ஹோமம், சிறப்பு அலங்கார பூஜைகள் உள்ளிட்ட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. காலை 2ம் கால யாக பூஜையும், மாலை 3ம் கால யாக பூஜையும் நடந்தது.
தொடர்ந்து, காலை 5 மணிக்கு, 4ம் கால யாக பூஜை நடத்தப்பட்டு, காலை 9 மணிக்கு மேல், சக்தி பீடம் ஸ்ரீ சுப்பிரமணிய அடிகளார் தலைமையில், ஸ்ரீ செல்லாண்டியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர், மகா அபிஷேகம், அலங்காரம் மற்றும் மகா தீபாராதனையும் நடைபெற்றது . விழாவில் அரசியல் பிரமுகர்கள் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு அம்மனை தரிசித்து அருள்பெற்றனர். பின்னர் ஏராளமான பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இதுகுறித்து சுப்பிரமணிய அடிகளார் கூறுகையில்,
35 ஆண்டுகளுக்கு மேலாக நாடி வரும் பக்தர்களுக்கு அம்மன் அருள்பாலித்து வருகின்றது.25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெற்ற இந்த மஹா கும்பாபிஷேகமானது மிக சிறப்பாக நடைபெற்று வருகின்றது.
கும்பாபிஷேகமானது தமிழ் பண்பாட்டின்படியும் கலாசாத்தின்அடிப்படையிலும் நடைபெற்றன. பக்தர்கள் வேண்டுவது வேண்டியபடியே நிறைவேற்றித் தருவது செல்லாண்டியம்மனின் சிறப்பாகும் என்று தெரிவித்தார்.விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோயில் நிர்வாகம் சார்பில் சிறப்பாக செய்திருந்தது.
Summary
The Maha Kumbabishekam festival at the Sri Chellandi Amman Temple in Chellappa Goundan Pudur was celebrated with great pomp and grandeur.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

மாகாளியம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக பெருவிழா!

தான்தோன்றி அம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம்

கருப்பூர் ஸ்ரீ மாரியம்மன் கோயிலில் மஹா கும்பாபிஷேகம்!
விடியோக்கள்

Podacst | இண்டியா கூட்டணியைக் கரை சேர்க்குமா காங்கிரஸ்? | News and Views | Epi - 44 |

கோயில்களில் தரிசனத்திற்கு இனி ஆன்லைன் முன்பதிவு! - அமைச்சர் ரமேஷ் | TVK | Online booking

Annamalai-யை வைத்து அரசியல் செய்யும் பாஜக? தமிழிசை சௌந்தரராஜன் பதில்! | BJP




