திமுக ஆட்சியில் பதியப்பட்ட வழக்குகள் ரத்து! 92,000 விவசாயிகள், ஆசிரியர்கள் விடுவிப்பு!அக்வான் புயல் எங்கே கரையைக் கடக்கும்? வெளியான அதிர்ச்சித் தகவல்!கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு முன்னாள் எம்.எல்.ஏ. முத்துக்குமாருக்கு நவ. 16 வரை நீதிமன்றக் காவல்! ஐசிசி தலைவராக மீண்டும் ஜெய் ஷா தேர்வு!ஜார்க்கண்ட் நிலக்கரிச் சுரங்கம்!அபாயத்தில் 6 லட்சம் மரங்களும் யானைகள் வாழ்விடமும்!!மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!குற்றவாளிகளின் ‘ஹோல்சேல்’ கூடாரமாக தவெக! மு.க. ஸ்டாலின்மதுரை நகைக் கடை திருட்டு! நிஷாந்த் கைதானது எப்படி? பேருந்து ஓட்டுநரின் சந்தேகம்!மதுரை நகைக் கடை கொள்ளை வழக்கு: நிஷாந்த் கைது

சுவாமிமலையில் கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!

சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது பற்றி...

Karthigai Deepam festival

சுவாமிமலை முருகன் - video crop

Updated On :

முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமிமலையில் திருக்கார்த்திகை தீபத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் தமிழ் கடவுள் எனப் போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் நான்காம் படைவீடான சுவாமி மலை அமைந்துள்ளது. பிரபவ முதல் அட்சய முடியவுள்ள 60 தமிழ் வருடத் தேவதைகள் 60 படிக்கட்டுகளாக அமையப்பெற்ற கட்டுமலைக்கோயிலாகும்.

தந்தை சிவபெருமானுக்கு "ஓம்" எனும் பிரணவ மந்திர பொருளை குருவாக இருந்து உபதேசித்த பெருமை பெற்றது இத்தலம். எனவே, இத்தலத்தில் முருகப்பெருமான் சிவகுருநாதன் என்றும், சுவாமிநாதன் என்றும் போற்றப்படுகிறார்.

Story image

நக்கீரரால் திருமுருகாற்றுப்படையிலும் - அருணகிரிநாதரால் திருப்புகழிலும் பாடல் பெற்ற தலமும், அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் பாத தரிசனம் அருளிய சிறப்புடைய தலம் என்ற பெயரும் பெற்றது.

இத்தகைய சிறப்புப்பெற்ற நான்காம் படைவீடான சுவாமிமலையில் ஒவ்வொரு ஆண்டும் திருக்கார்த்திகை திருவிழா 11 நாள்களுக்குச் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதுபோல, இவ்வாண்டும் இவ்விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

வள்ளி - தெய்வானை சமேத சண்முகசுவாமி சிறப்பு மலர் அலங்காரத்தில் விநாயகர் மற்றும் சண்டிகேஸ்வரருடன் தங்கக் கொடிமரம் அருகே எழுந்தருள, கொடிமரத்திற்கு அபிஷேக ஆராதனைகள் செய்து வேலுடன் கூடிய யானை சின்னம் பொறிக்கப்பட்ட திருக்கொடி ஏற்றப்பட்டு மகா தீபாராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து சுவாமிகளுக்கும் கோபுர ஆர்த்தி செய்யப்பட்டது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.

இதனைத்தொடர்ந்து நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதி உலா நடைபெறுகிறது. தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 9ம் நாளான திருக்கார்த்திகை தினமான வரும் 24ம் தேதி காலை 7 மணிக்கு மேல் திருத்தேரோட்டமும், இரவு தங்கமயில் வாகனத்தில் சுவாமி திருவீதி உலா நடைபெற்று தீபக் காட்சியும் நடைபெற உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.