வைகையில் இருந்து தங்கக்குடத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு புனிதநீர்!
மீனாட்சி-சுந்தரேஸ்வரர் கும்பாபிஷேகத்திற்காக வைகை ஆற்றிலிருந்து புனிதநீர் கொண்டுவந்தது பற்றி..

மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு புனிதநீர் - Video crop
மதுரை மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, வேத மந்திரங்கள் முழங்க வைகை ஆற்றிலிருந்து மீனாட்சி சுந்தரேஸ்வரருக்குத் தங்கக்குடத்தில் யானையின் மீது புனித நீர் கொண்டு கோயிலுக்கு கொண்டு வரப்பட்டது.
மதுரை மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேக விழா 17 ஆண்டுகளுக்குப் பிறகு செப்டம்பர் 17 ஆம் தேதி காலை 7.40 மணி முதல் 8.10 மணிக்குள்ளாக நடைபெறுகிறது. இதனையடுத்து செப்டம்பர் 6 ஆம் தேதி முதல் 17 ஆம் தேதி வரை சிறப்புப் பூஜைகள், யாகசாலை பூஜைகள் நடைபெறுகின்றன.
நான்காம் நாள் நிகழ்வில் கோயில் வளாகத்திலிருந்து சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்கக் கோவில் யானையுடன் ஊர்வலமாக வருகை தந்து மதுரை வைகை ஆற்றின் தென்கரைப் பகுதியில் வேத மந்திரங்களுக்குப் பிறகு தங்கக் கடத்தில் (குடம்) புனிதநீர் எடுத்து யானை மீது சிவாச்சாரியார் அமர்ந்து ஊர்வலமாகக் கோயிலுக்குச் சென்று அங்கே நடைபெற்ற சிறப்பு வேள்விகளின்போது அந்த புனித நீர் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டது.
In preparation for the consecration ceremony of the Madurai Meenakshi Amman Temple, and amidst the chanting of Vedic mantras, holy water was brought from the Vaigai River to the temple in a golden pot carried by an elephant for the deities Meenakshi and Sundareswarar.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






