வி.எஸ். பாபுவுக்கு சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை! மருத்துவமனை அறிக்கை!தவெகவுக்கு மாநில கட்சி அங்கீகாரம்; விசில் சின்னம் ஒதுக்கீடு! தேர்தல் ஆணையம் அறிவிப்பு!தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தின் டெண்டரை எதிர்த்த வழக்கு தள்ளுபடி!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் அறிவிப்பு!மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு! - டிடிவி தினகரன்

மீனாட்சி அம்மன் கோயிலில் 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்கள் பொருத்தம்!

மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகம் பற்றி..

Meenakshi Amman

மீனாட்சி அம்மன் கோயில் - video crop

Published On :

மதுரை மீனாட்சி கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 200-க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமரா பொருத்தப்படவுள்ளதாகக் கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மதுரையில் மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் செப்டம்பர் 17ம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்திற்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடுகளை உறுதி செய்யும் வகையில், புது மண்டபத்தில் கட்டுப்பாட்டு அறை மற்றும் சிசிடிவி கட்டுப்பாட்டு கண்காணிப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அதனை மதுரை மாவட்ட ஆட்சியர் நிஷாந்த் கிருஷ்ணா மற்றும் மதுரை போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.

கோயில் வளாகம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 200-க்கும் மேற்பட்ட அதிநவீன சிசிடிவி மற்றும் முகம் கண்டறியும் வசதி கொண்ட கேமராக்கள் பொருத்தப்பட்டு, 24 மணி நேரமும் கண்காணிக்கப்படும். வருவாய், மாநகராட்சி, போலீஸ், தீயணைப்பு, சுகாதாரம், மின்வாரியம் உட்பட 10 துறைகளின் அலுவலர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றும் வகையில் மாநகராட்சி சார்பில் கோயில் பகுதியில் 45 கட்டுப்பாட்டு அறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

43 இடங்களில் 24 மணி நேரமும் செயல்படும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் அமைக்கவும், கண்காணித்து, பராமரிக்க 25க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப உதவியாளர்களுக்குப் பணி ஒதுக்கப்பட்டுள்ளது. நகர்நலப் பிரிவு சார்பில், 24 சுகாதார ஆய்வாளர்கள் தலைமையில் பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கும்பாபிஷேகப் பணிக்காக 10 துறைகளின் கட்டுப்பாட்டு அறை அலுவலர்களை ஒருங்கிணைக்க ஆவின் பொது மேலாளர் முத்துமாதவன் நியமிக்கப்பட்டுள்ளார். மாநகராட்சி ஒருங்கிணைப்பு அலுவலர்களாகத் தலைமைப் பொறியாளர் ராமசாமி, நகர்நல அலுவலர் அரவிந்த் ஜோதி, சி.டி.பி.ஓ., முரளி, மருத்துவ அலுவலர் அறிவரசன் பொறுப்பு வகிக்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.