திருமண வரம் அருளி, பார்வதி சுயம்வர யாகம் கோயில் என சிறப்புப் பெற்ற கோயிலாகத் திகழ்வது கெம்பநாயக்கன்பாளையம் தண்டாயுதபாணி கோயிலாகும்.
பல ஆண்டுகளுக்கு முன்பாக, இங்கு குப்பண்ண கவுண்டர் என்ற பிரம்மச்சாரி வாழ்ந்து வந்தார். தேநீர் கடை நடத்தி வந்த இவரின் கனவில் வந்த முருகப் பெருமான், ""ஊரின் வடக்கே ஊஞ்ச மரங்கள் நிறைந்த வனத்திலே என்னுடைய காலடிப்பட்ட தடம் உள்ளது. அங்கே எனக்கு கோயில் எழுப்பினால் உங்களைக் காத்து அருள்வேன்'' என்றார். அந்த இடத்தைத் தேடியபோது, பூக்களின் குவியல் தென்பட்டது. அங்கு விநாயகர், தண்டாயுதபாணி, நவக்கிரக சந்நிதிகளை அமைக்க முயன்றார்.
வனப் பகுதியில் அமைந்த இந்த தலத்துக்கு மரங்களை வெட்டி மாட்டுவண்டியில் கொண்டு வரும்போது, வனக்காவலர் பறிமுதல் செய்தார். இதனால், அவரின் பார்வை பறிபோனது. அதற்கு வண்டிக்காரர், ""முருகன் கோபம் இது. முருகனிடம் மனமுருகி மன்னிப்பு கேளுங்கள். கருணை செய்வார்'' என்று கூற, தவறை நினைத்து வனக் காவலர் வேண்டவே பார்வை கிடைத்தது.
மூலவர் தண்டாயுதபாணி மேற்கு நோக்கி அபூர்வ கோலத்தில் காட்சி அளிக்கிறார். இரண்டடி உயரத்தில் வலது கையில் தண்டம் ஊன்றி, இடது கையை இடுப்பில் வைத்து பழனி தண்டாயுதபாணியாக அருளாசி வழங்குகின்றார்.
"திருமணத் தடைபட்டவர்கள் மூன்று கிருத்திகைகள் வழிபட்டால் திருமணம் கைகூடும்' என்பது ஐதீகம்.
ஆண்டுதோறும் வைகாசி 26}இல் நடைபெறும் "பார்வதி சுயம்வர யாகம்' நிகழாண்டு ஜூன் 8}இல் (சனிக்கிழமை) நடைபெறுகிறது. இதில் திருமணமாகாதவர்கள் தங்கள் ஜாதகத்தை இறைவன் பாதத்தில் வைத்து வழிபாட்டில் பங்கேற்பர். மலைவாழ்,கிராம மக்கள் இலவசமாக யாகத்தை நடத்தி, அன்னதானம் செய்வது சிறப்பாகும்.
ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட சத்தியமங்கலத்தில் இருந்து 15 கி. மீ. தொலைவில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் கொருமடுவில் கோயில் அமைந்துள்ளது. சத்தியமங்கலம்} கடம்பூர் வழித்தடத்தில் நால் ரோட்டில் இருந்து பெரும்பள்ளம் அணைக்குச் செல்லும் வழியில் ஏழு கிலோமீட்டர் தொலைவில் இந்த தலம் அமைந்திருக்கிறது.
தொடர்புக்கு: 97905 91091.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆல் ஃபார்மட் வீரராக இருப்பது சவால் கிடையாது, வரம்: வாஷிங்டன் சுந்தர்

பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் தமிழ்ப் புத்தாண்டு பிறப்பு சிறப்பு வழிபாடு

வளமும், அருளும் கிடைக்க...

வடபழனி கோயில் திருமண மண்டபம் புதுப்பித்தல் பணியை எதிா்த்து வழக்கு: இந்து சமய அறநிலையத் துறை பதிலளிக்க உத்தரவு
வீடியோக்கள்

நாதக வேட்பாளர் வித்யாராணி வீரப்பன் கைது! கண்ணீர் விட்டு கதறியதால் பரபரப்பு!
தினமணி செய்திச் சேவை

டிரம்ப் மோடியை கட்டுப்படுத்துவதுபோல் பாஜக அதிமுகவை கட்டுப்படுத்துகிறது! - Rahul Gandhi
இணையதளச் செய்திப் பிரிவு

கருத்துக்கணிப்பு சொல்வதெல்லாம் உண்மையா ? | TN Election 2026 | TN Election Survey 2026
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | தோல்வியைச் சந்திக்காத பஞ்சாப்: எழுச்சி பெறாத லக்னௌ! | Punjab Kings | Priyansh Arya |
தினமணி செய்திச் சேவை

