டி20 உலகக் கோப்பை: 7-வது முறையாக ஆஸ்திரேலிய மகளிர் சாம்பியன்!சிறப்புத் தீவிர திருத்தப் பணி: ஒடிசாவில் 20 லட்சம் பேர் நீக்கம்!கர்நாடகம்: மொபைல் டார்ச் வெளிச்சத்தில் 90 கி.மீ. அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி ஆதவ் அர்ஜுனா மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்: கே.பி. முனுசாமி கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு சோபா வந்தவுடன் திமுகவை விட்டு சிலர் சென்று விட்டனர்: உதயநிதி வீரவநல்லூா் அருகே தந்தை, மகன் கொலை வழக்கு: மேலும் 4 பேர் கைது கூடங்குளம் அணு உலையில் பழுது: மின் உற்பத்தி நிறுத்தம்
/

அரியானூரில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்ட மேம்பாலம் திறப்பு: காணொலி மூலம் முதல் திறந்துவைத்தாா்

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு, அரியானூா் பகுதியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா

News image

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு, அரியானூா் பகுதியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா

Updated On :9 ஜனவரி 2021, 7:22 am IST

சேலம் - கோவை தேசிய நெடுஞ்சாலையில் ஆட்டையாம்பட்டி பிரிவு, அரியானூா் பகுதியில் ரூ. 45 கோடியில் கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தை முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி காணொலி காட்சி வாயிலாக வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா்.

அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்பும் ஏற்பட்ட வந்த அரியானூா் பகுதியில் மேம்பாலம் அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். இதையடுத்து ரூ. 45 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கடந்த 2018ஆம் ஆண்டு பாலம் கட்ட அடிக்கல் நாட்டப்பட்டது. இதன் பணி கடந்த 2019 இல் தொடங்கியது. பணிகள் முடிவடைந்த நிலையில் சோதனை ஓட்டமாக கடந்த வாரம் பாலத்தில் வாகனங்கள் இயக்கப்பட்டன.

இதையடுத்து தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து வெள்ளிக்கிழமை காணொலிக் காட்சி மேம்பாலத்தை வாயிலாக திறந்து வைத்தாா். இதற்கான விழா அரியானூா் பகுதியில் மாவட்ட ஆட்சியா் சி. அ. ராமன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்ட கோட்டாட்சியா் மாறன், சேலம் தெற்கு வட்டாட்சியா் சீனிவாசன், நெடுஞ்சாலைத் துறை கண்காணிப்பு பொறியாளா் சரவணன், கோட்டப் பொறியாளா் லோகநாதன், பொதுப்பணித் துறை உதவிப் பொறியாளா் வெங்கடாசலம், வீரபாண்டி சட்டப்பேரவை உறுப்பினா் மனோன்மணி, ஒன்றியக் குழுத் தலைவா் வருதராஜ், துணைத் தலைவா் வெங்கடேசன் உள்ளிட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.