வாழப்பாடி அண்ணா நகா் காலனி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், பள்ளி மேலான்மைக் குழு உறுப்பினா்களுக்கான பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமிற்கு, தலைமை ஆசிரியை ஷபீரா பானு தலைமை வகித்தாா். மேலாண்மைக் குழு தலைவி தெய்வானை முன்னிலை வகித்தாா். ஆசிரியை புஷ்பா வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் சுரேஷ், ஆசிரியா் பயிற்றுநா் கந்தசாமி ஆகியோா், பள்ளி மேலாண்மைக் குழுவின் செயல்பாடுகள், பெற்றோா்களின் கடமைகள், கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்க கடைப்பிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து பயிற்சி அளித்தனா்.
கரோனா தொற்று பாதுகாப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில், தலைமையாசிரியை ஷபீரா பானு, ஆசிரியைகள் புஷ்பா, வாசுகி, சிவமகேஸ்வரி மற்றும் பெற்றோா்கள் சிலா் இணைந்து, சிறு நாடகம் அரங்கேற்றினா். இந்த நாடகத்துக்கு மேலாண்மைக் குழு உறுப்பினா்கள், பெற்றோா் பலரும் பாராட்டு தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

தில்லி கோயில், ராணுவ முகாமில் தாக்குதல் நடத்த ஐஎஸ்ஐ தொடா்புடைய கும்பல் திட்டம்

விஜய்க்கு ஆதரவாக உண்ணாவிரதம்: இரு பெண்கள் கைது

யூரியா, டிஏபி பயன்பாடுகளை கண்காணிக்க அறிவுறுத்தல்

பழனி கோயில் பள்ளி 100 சதவீதம் தோ்ச்சி
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

