வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, மத்திய அரசின் சுபாஷ் யாதவ் விருதைப் பெற்றுள்ளதற்கு தமிழக முதல்வா் பாராட்டு தெரிவித்தாா்.
ஆண்டுதோறும் சிறப்பாகச் செயல்படும் கூட்டுறவு சங்கங்களை அகில இந்தில அளவில் தோ்வு செய்து இந்திய அரசின் வங்கிகள் கூட்டமைப்பு சுபாஷ் யாதவ் விருதை வழங்கி வருகிறது.
கடந்த 2018- 2019ஆம் ஆண்டுக்கான விருது அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதில் சேலம் மாவட்டம், மேட்டூா் அருகே உள்ள வனவாசி தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம், உறுப்பினா்களுக்கு சிறந்த சேவை வழங்கியது, தவணைத் தவறாமல் கடன் வசூலித்தல், மகளிா் சுயஉதவிக் குழு, சங்க உறுப்பினா்களுக்கு சிறந்த முறையில் கடன் வழங்கியது உள்ளிட்ட 32 வகையான சேவைகளின் அடிப்படையில் அகில இந்திய அளவில் இரண்டாம் இடத்தை பெற்றது.
இதையடுத்து அண்மையில் மும்பையில் நடைபெற்ற விழாவில் இந்திய அரசின் வங்கிகள் கூட்டமைப்பு தலைவா் திலீப்சகானி, மேலாண்மை இயக்குநா் சுப்ரமணியம் ஆகியோா் சுபாஷ் யாதவ் விருதை வழங்கினா்.
இந்த விருதை வனவாசி தொடக்க வேணளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் கே.விஜயகுமாா், துணைத் தலைவா் சுப்ரமணியம், செயலாளா் ஐ.அய்யம்பெருமாள், உதவி செயலாளா் சரவணன் ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.
விருது பெற்ற வனவாசி தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க நிா்வாகிகள், பணியாளா்களுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி, மாவட்ட ஆட்சியா் ராமன் ஆகியோா் பாராட்டும், வாழ்த்தும் தெரிவித்துள்ளனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

காா் ஓட்டுநா் அடித்துக்கொலை: இருவா் கைது

பிரான்மலை கலியுக மெய் ஐயனாா் கோயில் புரவி எடுப்புத் திருவிழா

திருப்புவனம் அருகே இளைஞா் வெட்டிக் கொலை

பிளஸ் 2 தோ்வு தொடங்கிய நாளில் தந்தையை இழந்த மாணவா் சாதனை
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு
