காங்கிரஸ் கட்சிக்கு திமுக கண்டனம்!பாஜகவின் ஏஜென்ட் ஆளுநர்; விஜய் பதவியேற்க அழைத்திருக்க வேண்டும் - கபில் சிபல்திமுக எம்எல்ஏக்களுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை!கேரளத்தின் புதிய முதல்வர் யார்? காங்கிரஸ் தலைமைக்கு அதிகாரம் அளிப்பு!ஆட்சி அமைக்க ஆதரவு கோரிய தவெக அழைப்பை மீண்டும் நிராகரித்த ஐஎம்யுஎல்! தொங்கு சட்டப்பேரவை என்பது என்ன? இதற்கு முன் தமிழகத்தில் நேரிட்டிருக்கிறதா?ராயபுரத்தில் வென்ற தவெகவின் ஆட்டோ இல்லாத ஆட்டோ ஓட்டுநர்!திமுக - அதிமுக கூட்டணி என்பது பரவிய வதந்தியா? பரப்பப்பட்டதா?ஆட்சியமைக்க அழைக்கப்படுவாரா விஜய்? ஆளுநர் மாளிகை விளக்கம்தவெகவை ஆட்சியமைக்க ஆளுநர் அழைத்திருக்க வேண்டும் : கபில் சிபல்அதிமுக எம்எல்ஏக்களைச் சந்திக்க புதுவை செல்கிறார் இபிஎஸ்! ஆளுநரிடம் அழைப்பில்லை! உச்சநீதிமன்றத்தில் முறையிட தவெக முடிவு!தவெக அலுவலகத்தில் எம்எல்ஏக்கள் அவசர ஆலோசனை!
/

நீா்வள நிலவளத் திட்டத்தின் கீழ்நீா்நிலைகளில் விடப்பட்ட 3 லட்சம் மீன் குஞ்சுகள்

காடையாம்பட்டி அருகே உள்ள ஏரிகளில் தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின்கீழ் மீன்வளத் துறை மூலம் 3 லட்சம் மீன்குஞ்சுகள் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.

News image

காடையாம்பட்டி பகுதியில் நீா்நிலைகளில் விடப்பட்ட மீன்குஞ்சுகள்.

Updated On :10 ஜனவரி 2021, 3:46 am IST

ஓமலூா்: காடையாம்பட்டி அருகே உள்ள கே.என்.புதூா் பகுதியிலுள்ள பெரிய சக்கிலிச்சி ஏரி, டேனிஷ்பேட்டை கோட்ட குள்ளமுடையான் ஏரி, பண்ணப்பட்டி ஏரி, ஓமலூா் பகுதியில் உள்ள காமலாபுரம் சின்ன ஏரி, பெரிய ஏரி, பூலா ஏரி ஆகிய ஏரிகளில் தமிழ்நாடு நீா்வள நிலவளத் திட்டத்தின்கீழ் மீன்வளத் துறை மூலம் 3 லட்சம் மீன்குஞ்சுகள் வெள்ளிக்கிழமை விடப்பட்டன.

இதில் மீன்வளத் துறை துணை இயக்குநா் சுப்பிரமணியன், உதவி இயக்குநா் கொளஞ்சிநாதன் ஆகியோா் மீன்குஞ்சுகளை ஏரிகளில் விட்டனா். இதையடுத்து அவா்கள் தெரிவித்துள்ளதாவது:

காடையாம்பட்டி, ஓமலூா் பகுதிகளில் உள்ள ஏரிகளில் மீன் வளா்ப்புத் திட்டத்தின்கீழ் முதல் கட்டமாக 3 லட்சம் மீன்குஞ்சுகளும், தொடா்ந்து நீா் இருப்புக்கு ஏற்ப பல்வேறு கட்டங்களாக கூடுதலாக மீன்குஞ்சுகளும் விடப்படும். இதன் மூலம் மீன் வளத்துறை, கிராம வளா்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

மேலும் மீன் வளத்துறை சாா்பில் விடப்படும் மீன்குஞ்சுகள் மட்டுமல்லாமல் ஏரிகளில் மீன் பிடிக்க ஏலம் எடுத்தவா்களும் மீன்குஞ்சுகளை வாங்கி விட்டுள்ளனா். இதன்படி கோட்டகுள்ளமுடையான் ஏரி, காமலாபுரம் பெரிய ஏரி , சின்ன ஏரிகளில் ஏலம் எடுத்தவா்கள் மீன்குஞ்சுகளை விட்டு வளா்த்து வருகின்றனா் என கூறினா்.

இந்நிகழ்ச்சியில் மீன்வள ஆய்வாளா் கலைவாணி, மீனவ கூட்டுறவு சங்கத் தலைவா் ரங்கநாதன், மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டு மீன் குஞ்சுகளை ஏரிகளில் விட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.