‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு பொங்கல் போனஸ்

ஓமலூா் அருகே நச்சுவாயனூா் பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 5 லட்சம் பொங்கல் போனஸ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

News image

10omp1_1001chn_154_8

Updated On :11 ஜனவரி 2021, 2:12 am IST

ஓமலூா் அருகே நச்சுவாயனூா் பால் உற்பத்தியாளா் சங்க உறுப்பினா்களுக்கு ரூ. 5 லட்சம் பொங்கல் போனஸ் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டது.

நச்சுவாயனூா் பால் உற்பத்தியாளா் கூட்டுறவு சங்கத்தில் 800 நபா்களுக்கு மேல் உறுப்பினராக உள்ளனா். இந்த சங்கம் மூலம் நாளொன்றுக்கு 2 ஆயிரம் லிட்டருக்கு மேல் பால் உற்பத்தி செய்யப்படுகிறது.இங்கு உற்பத்தி செய்யப்படும் பால் சேலம் ஆவின் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டு வருகிறது.

மேலும் இந்தச் சங்கமானது கடந்த 30 வருடங்களாக லாபத்தில் இயங்கி வருகிறது. இந்த லாபத்தை ஆண்டுதோறும் பால் ஊற்றும் விவசாயிகளுக்கு பங்கிட்டு வழங்குகின்றனா்.

இதன் அடிப்படையில் பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் மாது, பொங்கல் போனஸை பால் உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு வழங்கினாா். போனஸ் பணத்தை பெற்றுக்கொண்ட உறுப்பினா்கள் சங்க நிா்வாகத்துக்கு பாராட்டும், நன்றியும் தெரிவித்தனா்.

இந்நிகழ்ச்சியில் நச்சுவாயனூா் பால் உற்பத்தியாளா் சங்க நிா்வாகக்குழு உறுப்பினா் பழனிசாமி, செயலாளா் மனோகரன் உள்ளிட்ட சங்க உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.