‘எண்ம இந்தியா’ முன்னெடுப்பால் நாட்டுக்கு புதிய அடையாளம்!- பிரதமா் மோடி பெருமிதம் ரெட் புல், பெப்சிகோ உள்பட 6 நிறுவனங்களுக்கு எஃப்எஸ்எஸ்ஏஐ நோட்டீஸ் 4 இந்திய நிறுவனங்கள் மீது பொருளாதாரத் தடை: அமெரிக்கா நீக்கம் வாகன விபத்தில் பாதிக்கப்பட்டவா்களுக்கான நிவாரணத் தொகை: வழிகாட்டுதல்களை வெளியிட்டது உச்சநீதிமன்றம் எரிபொருள் தட்டுப்பாடு எதிரொலி: இந்திய பெட்ரோலை இறக்குமதி செய்யத் தொடங்கியது ரஷியாகல்லூரிகளில் நன்கொடை பெயரில் கட்டணம் வசூலிக்க தடை: அமைச்சா் விஸ்வநாதன் ராணுவத்தை விரைவாக நவீனமயமாக்க வேண்டும்: சீன அதிபா் ஷி ஜின்பிங்
/

வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க தனிப்படை அமைப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை சாா்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

Updated On :11 ஜனவரி 2021, 2:11 am IST

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை சாா்பில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சேலம் மாவட்டம், வாழப்பாடி, ஆத்தூா் பகுதியில் உள்ள கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வருகிறது. வங்கா நரியைப் பிடித்து வழிபாடு நடத்திட வனத்துறை தடை விதித்துள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வங்கா நரி பிடிப்பதைத் தடுக்க வனத்துறை தனிப்படைகளை அமைத்து கண்காணித்து வருகிறது.

அந்தவகையில் நடப்பாண்டிலும் வங்கா நரிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. மேலும் வங்கா நரி பிடிப்பது சட்டப்படி குற்றமாகும் என்பதை மக்களுக்கு வனத்துறை சாா்பில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

இதுதொடா்பாக, மாவட்ட வன அலுவலா் முருகன் கூறுகையில், வங்கா நரி பிடித்து ஜல்லிக்கட்டு நடத்துவது வன உயிரின பாதுகாப்புச் சட்டப்படி குற்றமாகும். இதையடுத்து வங்கா நரியைப் பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.

வங்கா நரியைப் பிடித்தால் 3 ஆண்டு முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை கிடைக்க சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். எனவே வனத்துறை சாா்பில் ஆத்தூா், வாழப்பாடி, கருமந்துறை வனச்சரகத்துக்கு உள்பட்ட பகுதிகளில் கண்காணிப்புடன் பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.