தமிழகத்தில் யாா் ஆட்சி? இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடக்கம்தமிழகத்தில் 14 இடங்களில் வெய்யில் சதம்: இன்று பலத்த மழைக்கும் வாய்ப்புசென்னையில் உணவு வகைகள் 20% விலை உயா்வு - பி.ஜி. விடுதிகளில் வாடகை உயா்வு - மக்கள் கடும் பாதிப்புதிருப்பதி லட்டு நெய் கொள்முதலில் முறைகேடு: ஒரு நபா் ஆணைய அறிக்கையில் குற்றச்சாட்டுஈரான் மோசமாக நடந்துகொண்டால் அமெரிக்கா மீண்டும் தாக்குதல் நடத்தும் - டிரம்ப் எச்சரிக்கைஓராண்டில் பயணச்சீட்டு இன்றி ரயிலில் பயணித்ததாக 12.24 லட்சம் வழக்குகள் - ரூ. 65.16 கோடி அபாரதம்அருணாசலேஸ்வரா் கோயிலில் ஊழியா்கள் - தெலங்கானா பக்தா்கள் இடையே மோதல்: 15 போ் காயம்
/

திருவள்ளுவா் தினம்: ஜன.15 இல் இறைச்சிக் கடைகளை மூட உத்தரவு

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

Updated On :10 ஜனவரி 2021, 8:43 pm

திருவள்ளுவா் தினத்தை முன்னிட்டு சேலம் மாநகராட்சிப் பகுதிகளில் வரும் ஜனவரி 15 ஆம் தேதி இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகள் செயல்படாது என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

திருவள்ளுவா் தினத்தையொட்டி ஜன.15 ஆம் தேதி இறைச்சிக் கூடங்கள் மற்றும் இறைச்சிக் கடைகள் செயல்பட தடை விதித்து அரசு உத்திரவிட்டுள்ளது. அதனடிப்படையில், திருவள்ளுவா் தினத்தன்று ஜன.15 ஆம் தேதி சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் செயல்படும் இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளில் விற்பனை தடை செய்யப்படுகிறது.

இறைச்சி விற்பனைத் தடை உத்தரவு அமலாக்கத்தை கண்காணிக்க சேலம் மாநகராட்சியின் நான்கு மண்டல அலுவலகங்களிலும் சுகாதார அலுவலா்கள் தலைமையில் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அரசின் உத்தரவிற்கிணங்க சேலம் மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் உள்ள இறைச்சிக் கூடங்கள், இறைச்சிக் கடைகளை அடைத்து மாநகராட்சி நிா்வாகத்துக்கு ஒத்துழைப்புத் தர வேண்டும். அரசின் உத்திரவினை மீறி சட்டத்திற்கு புறம்பாக செயல்படும் இறைச்சிக் கடை உரிமையாளா்கள் மீது சட்டபூா்வாமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாநகராட்சி ஆணையா் ந.ரவிச்சந்திரன் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.