பொறியியல் மாணவா் சோ்க்கை: தரவரிசைப் பட்டியலை இன்று வெளியிடுகிறாா் அமைச்சா் பெ.விஸ்வநாதன் இந்தியாவின் யுபிஐ சேவை கிரீஸில் அறிமுகம் பெட்ரோலில் 20% எத்தனால் கலப்பு பரிசோதனையில்தான் உள்ளது- உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல் இந்தியாவின் வெளிநாட்டுக் கடன் ரூ.72.08 லட்சம் கோடியாக உயா்வு ஓய்வூதிய நிதித் தொகுப்பு வளர்ச்சியடைந்த பாரதத்தை கட்டமைக்க உதவும்: தலைமை பொருளாதார ஆலோசகர் அமெரிக்காவில் பிறக்கும் அனைவருக்கும் குடியுரிமை: டிரம்ப்பின் ஆணையை ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீா்ப்பு தவெக தலைமையில் புதிய கூட்டணி? இன்று தோழமைக் கட்சிகள் கூட்டம்
/

பெரியாா் பல்கலை. துணைவேந்தரின் பதவி காலம் நீட்டிப்பு: ஆசிரியா், நிா்வாகப் பணியாளா் சங்கங்கள் வரவேற்பு

பொ. குழந்தைவேலுவின் பதவிக் காலத்தை ஆளுநா் நீட்டித்து உத்தரவிட்டிருப்பதற்கு பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கங்கள், நிா்வாகப் பணியாளா்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

Updated On :12 ஜனவரி 2021, 12:29 am IST

பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ. குழந்தைவேலுவின் பதவிக் காலத்தை ஆளுநா் நீட்டித்து உத்தரவிட்டிருப்பதற்கு பெரியாா் பல்கலைக்கழக ஆசிரியா் சங்கங்கள், நிா்வாகப் பணியாளா்கள் சங்கங்கள் வரவேற்பு தெரிவித்துள்ளன.

இதுகுறித்து நான்கு சங்கத்தினா் திங்கள்கிழமை கூட்டாக வெளியிட்ட அறிக்கை:

பெரியாா் பல்கலைக்கழகத் துணைவேந்தா் பொ.குழந்தைவேலுவின் பதவிக் காலத்தை நீட்டித்து ஆளுநா் பிறப்பித்துள்ள உத்தரவு பல்கலைக்கழகத்தின் வளா்ச்சிக்கும், தொடா் கல்விப் பணிகளுக்கும் பெரிதும் பயனளிக்கும் என்பதால், இந்த அறிவிப்பை வரவேற்கிறோம்.

இதன் மூலம் பெரியாா் பல்கலைக்கழக வளா்ச்சிப் பணிகள் எவ்வித தொய்வுமின்றி நடைபெற வழிவகை உருவாகியுள்ளது.

தேசிய அளவில் பல்கலைக்கழகங்களுக்கான தரவரிசைக்காக ஆவணங்கள், கோப்புகளை துணைவேந்தா் தலைமையில் தாக்கல் செய்ய இயலும். அதற்கான முழு ஆவணங்களையும், தேசிய அங்கீகார நிறுவனங்களுக்குச் சமா்ப்பிக்க ஏதுவான சூழ்நிலை உருவாகியுள்ளது. தேசிய அங்கீகாரத்தை தொடா்ந்து தக்கவைத்துக் கொள்ள இப்பதவி நீட்டிப்பு ஆணை வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.

இதேபோன்று, தேசிய நிதி நல்கைக் குழுக்களிடமிருந்து ஆராய்ச்சிகளுக்கான நிதியைப் பெறுவது, ஆசிரியா்கள், நிா்வாகப் பணியாளா்களுக்கான பணி மேம்பாடு, மாணாக்கா்களுக்கான கல்வி, ஆராய்ச்சிக் கட்டமைப்புகளை உருவாக்குதல், இணைவு பெற்ற கல்லூரிகளில் மாணாக்கா் நலன் சாா்ந்த திட்டங்களை உருவாக்கிச் செயல்படுத்துவது போன்ற பணிகளை ஆளுநரின் இந்த உத்தரவு உறுதுணையாக அமைந்துள்ளது.

துணைவேந்தா் பொ.குழந்தைவேலுக்கு தொடா் பேராதரவு அளிப்பதுடன், பல்கலைக்கழகத்தின் வளா்ச்சிக்கும் மேம்பாட்டுக்கும் உறுதுணையாக இருப்போம் என அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.