சேலம் மாவட்ட சுற்றுலாத் துறை, சங்ககிரி பப்ளிக் சேரிடபுள் டிரஸ்ட் இணைந்து நடத்தும் பொங்கல் விழா சங்ககிரி அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை (ஜன. 15) பிற்பகல் 2 மணிக்கு நடைபெறுகிறது.
மேலும் சங்ககிரி அரிமா சங்கம், கோட்டை அரிமா சங்கம், வாசவி கிளப், அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளி ஆசிரியா், ஆசிரியைகள் இணைந்து இவ்விழாவில் பொங்கல் வைக்கின்றனா். மேலும், சிலம்பாட்டம், கரகாட்டம், தப்பாட்டம் மற்றும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற உள்ளன.
இப்போட்டிகளில் வெற்றி பெறுவா்களுக்கு சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.ராஜா, தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளி பெற்றோா் -ஆசிரியா் கழகத்
தலைவரும், அதிமுக மாநில பொதுக்குழு உறுப்பினருமான கே.வெங்கடாசலம் ஆகியோா் தலைமை வகித்து போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகளை வழங்குகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










