(1) மாவட்ட நடுவர்(District magistrate/ District Collector), உட்கோட்ட நடுவர் (Additional District magistrate/ District Revenue Officerr அல்லது மாநில அரசால் இதற்கெனச் சிறப்பு வகையில் அதிகாரமளிக்கப்பட்ட வெறெந்த நிர்வாகத்துறை நடுவரின் கருத்தின்படி, இந்தப் பிரிவின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதற்குப் போதுமான காரணம் இருந்து, உடனடியாக தடையோ, விரைவான பரிகாரமோ விரும்பத் தக்கதாகவுள்ள நிலைகளில் அத்தகைய நடுவர் வழக்கிற்கு முக்கியமானவையாக உள்ள சங்கதிகளைக் குறிப்பிட்டு 134 வது பிரிவின் படி சார்வு செய்யப்படும் எழுத்து வடிவத்தினாலான ஒரு கட்டளை மூலமாக ஒருவரது அனுபோகத்தில் அல்லது அவரது ஆளுகையில் உள்ள குறிப்பிட்ட சொத்தைப் பொறுத்து குறிப்பிட்ட செயலைத் தவிர்க்குமாறு, அல்லது குறிப்பிட்ட உத்தரவைப் பெற்றுக் கொள்ளுமாறு, அவருக்கு உத்தரவிடுவதானது, சட்டபூர்வமாக வேலை செய்து வருகிற எவருக்கும் ஏற்படும் இடையூறு, தொந்தரவு அல்லது கேட்டையோ, மனித உயிர், ஆரோக்கியம் அல்லது பாதுகாப்புக்கு ஏற்படும் அபாயத்தையோ, பொது அமைதிக்கு ஏற்படும் பங்கம், அல்லது கலகம் அல்லது சச்சரவையோ தடுக்கக் கூடும் என்று எண்ணுவாரானால் அத்தகைய நடுவர் அவ்வாறே அத்தகையவருக்கு உத்தரவிடலாம்.