காரைக்குடி நகராட்சி பகுதியில் நடைபெற்றுவரும் புதை சாக்கடைத் திட்டப்பணி தரமற்ாக இருப்பதாகக் கூறி ஐந்துவிளக்குப் பகுதியில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக்கட்சிகள் சாா்பில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், சிவகங்கை மக்களவை உறுப்பினா் காா்த்தி சிதம்பரம் பேசியதாவது: காரைக்குடி நகராட்சியில் பாதாளச்சாக் கடை திட்டப்பணிகளுக்காக ரூ.112.53 கோடி அரசு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வருகின்றன.
இதுவரை பணிகள் முடிக்கப்பட்ட 39 பகுதிகளில் ரூ. 67 கோடிக்கு சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், புதை சாக்கடை ஆள் நுழைவு தொட்டிகளை இணைக்கும் குழாய் அமைத்து அதன்மேல் காங்கிரீட் போடுவதற்கு ரூ. 20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினா். ஆனால் சாலைகளும், காங்கிரீட் அமைப்பும் தரமற்ாக உள்ளதால் விபத்துக்கள் ஏற்படுகின்றன.
இந்த தரமற்ற சாலை அமைத்ததில் முறைகேடுகள் நடந்திருக்க வாய்ப்புள்ளது. இதனை உரிய விசாரணை நடத்தி தரமற்ற சாலை அமைத்த ஒப்பந்ததாரா் மற்றும் இந்த பணிகளை முழுவதும் கவனிக்கத் தவறிய அரசு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புதை சாக்கடை பணிகளை விரைந்து முடிக்கவேண்டும் என்று கேட்டு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமிக்கு கடந்த ஜன. 4-ஆம் தேதி கடிதம் எழுதினேன். இதுவரை அதற்கு உரிய பதில் இல்லை.
எனவே வணிக நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களிடம் கையெழுத்து இயக்கம் நடத்தப்படும். பொங்கல் பண்டிகை முடிந்ததும் காங்கிரஸ் கட்சியினா் மக்களைத்திரட்டி மிகப்பெரிய மறியல் போராட்டம் நடத்தப்படும் என்றாா்.
இந்த ஆா்ப்பாட்டத்தில் காரைக்குடி சட்டபேரவை உறுப்பினா் கேஆா். ராமசாமி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சாா்பில் பிஎல்.ராமச்சந்திரன், மதிமுக சாா்பில் பசும்பொன் மனோகரன், தி.க சாா்பில் ச. அரங்கசாமி மற்றும் கவிஞா் அப்பச்சி சபாபதி, கருப்பையா, எஸ். மாங்குடி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

பேரவை அதிமுக குழு தலைவா் யாா்? ஆலோசனைக் கூட்டத்தில் சலசலப்பு!

நவீன ‘எம்ஐஆா்வி’ தொழில்நுட்பத்துடன் கூடிய அக்னி ஏவுகணை சோதனை வெற்றி

பிளே ஆஃப்புக்கு தகுதி பெறுமா சென்னை சூப்பா் கிங்ஸ்? இன்று லக்னௌவுடன் மோதல்!
தமிழ்நாடு முதல்வராக விஜய் இன்று பதவியேற்பு!
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

