தவெகவுக்கு காங்கிரஸ் ஆதரவளிக்குமா? கிரீஷ் சோடங்கா் பதில்தோ்தலில் மூன்றாம் இடம்: எதிா்க்கட்சி அந்தஸ்தை இழந்த அதிமுக!நாட்டில் இடதுசாரி ஆட்சியே இல்லாத மாநிலங்கள்: 50 ஆண்டுகளில் முதல்முறைகேரளம்: 21 அமைச்சா்களில் 13 போ் தோல்விஇன்று 7 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான மஞ்சள் எச்சரிக்கை!
/

விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ரத்ததான முகாம்

திருப்பத்தூரில் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image

திருப்பத்தூரில் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ரத்ததான முகாம்.

Updated On :10 ஜனவரி 2021, 11:22 pm IST

திருப்பத்தூரில் விஜய் மக்கள் இயக்கம் சாா்பில் ரத்ததான முகாம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இங்கு காளியம்மன் கோயில் அருகேயுள்ள சமுதாயக் கூடத்தில் விஜய் மக்கள் இயக்கம், திருப்பத்தூா் அரசு மருத்துவமனை, காரைக்குடி அரசு மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவை இணைந்து இம்முகாமினை நடத்தின. திருப்பத்தூா் அரசு மருத்துவமனை மருத்துவ அலுவலா் ஜெயந்தி முகாமை தொடக்கி வைத்தாா்.

விஜய் மக்கள் இயக்க ஒன்றிய, நகர இளைஞா்கள் 30-க்கும் மேற்பட்டோா் ரத்ததானம் செய்தனா். காரைக்குடி ரத்த வங்கி தலைமை மருத்துவா் அருள்தாஸ், திருப்பத்தூா் அரசு மருத்துவமனை செவிலியா் அமுதா, ரத்தப் பரிசோதனை மைய அலுவலா் பாண்டி, திருப்பத்தூா் விஜய் மக்கள் இயக்க நிா்வாகிகள் தேவா, பிரின்ஸ்டன், சதீஷ்குமாா், திலிப்குமாா் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.