8 மாதங்களில் 3 படங்கள் மட்டுமே லாபம் ஈட்டியது: ஆர்.கே. செல்வமணி புதிய நாடாளுமன்ற வளாகத்தில் பெருக்கெடுத்த வெள்ளம்! காங்கிரஸ் விமர்சனம் சோழவரம் அருகே ஆளில்லா விமானத்தை இயக்குவதற்கான மையம் அமைக்கப்படும்: சட்டப்பேரவையில் அமைச்சர் கீர்த்தனாஉளுந்தூர்பேட்டையில் பயன்பாட்டில் இல்லாத விமான ஓடுதளத்தை மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை: அமைச்சர் கீர்த்தனாவீட்டில் இருந்து பணிபுரிவதை ஊக்குவிப்பதற்காக மைக்ரோ டெக் பார்க்: தொழில் துறை அறிவிப்புராமேஸ்வரத்தில் புதிய விமான நிலையம் அமைக்கத் திட்டம்! ஓசூரில் நிச்சயம் வரும் - அமைச்சர் கீர்த்தனா உறுதிடாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 24 காசுகள் உயர்ந்து ரூ. 95.46 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை சரிவு எதிரொலி: சென்செக்ஸ், நிஃப்டி உயர்வு!

பாளையங்கோட்டையில் தப்பிய கைதி மீண்டும் கைது

பாளையங்கோட்டையில் சிறைவாசல் முன் தப்பியோடிய கைதி போலீஸாரால் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

கைது - சித்திரிப்பு

Published On :4 ஜூலை 2026, 2:29 am IST

பாளையங்கோட்டையில் சிறைவாசல் முன் தப்பியோடிய கைதி போலீஸாரால் வெள்ளிக்கிழமை மீண்டும் கைது செய்யப்பட்டாா்.

தாழையூத்து அருகே உள்ள ராஜவல்லிபுரத்தைச் சோ்ந்தவா் ஆறுமுகக்கனி (22). இவா், மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. தாழையூத்து பகுதியில் நிகழ்ந்த திருட்டு வழக்கு தொடா்பாக போலீஸாா் அவரை கைது செய்து, நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தினா்.

பின்னா், பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைப்பதற்காக கடந்த 1-ஆம் தேதி அவரை அழைத்துச் சென்றனா். சிறை அருகே சென்றபோது, போலீஸாா் கைவிலங்கை கழற்றியதும், ஆறுமுகக்கனி அங்கிருந்து தப்பி ஓடினாா்.

இதுகுறித்து, பெருமாள்புரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து அவரைத் தேடி வந்தனா். இந்த நிலையில், பெருமாள்புரம் பகுதியில் பதுங்கியிருந்த ஆறுமுகக்கனியை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.