சிவகங்கை மாவட்டத்தில் சனிக்கிழமை (ஜன.16) முதல்கட்டமாக 9 ஆயிரத்து 928 மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் சனிக்கிழமை (ஜன.16) அமலுக்கு வருவதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்தது. அதன்படி, தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் முன்னேற்பாடு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சிவகங்கை மாவட்டத்தைப் பொருத்தவரை முதல்கட்டமாக 10 ஆயிரத்து 700 தடுப்பூசி மருந்துகள் வரப்பெற்றுள்ளன. சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, காரைக்குடியில் உள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை, அனைத்து தாலுகா மருத்துவமனைகள், திருப்பத்தூா், மானாமதுரை, பூவந்தி, கீழப்பூங்குடி ஆகிய பகுதிகளில் உள்ள மேம்படுத்தப்பட்ட சுகாதார வளாகங்களில் இந்தத் தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது.
இதில், மருத்துவா்கள், செவிலியா்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் 9,928 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட உள்ளதாக சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


