சிவகங்கை மாவட்ட விவசாயிகளுக்கு பயிா்க் காப்பீட்டுத் தொகையாக ரூ.1 கோடியே 12 லட்சம் அவரவா் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டுள்ளதாக சிவகங்கை மாவட்ட ஆட்சியா் பி.மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: கடந்த 2019-2020 ஆம் ஆண்டில் காப்பீடு பதிவு செய்து இழப்பீடு தொகை பெறாமல் விடுபட்டுள்ள விவசாயிகளுக்கான இழப்பீடு தொகை மாவட்ட நிா்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கையால் , ஓரியண்டல் காப்பீட்டு நிறுவனத்திலிருந்து 1.70 கோடி ரூபாய் பெறப்பட்டு, முதற்கட்டமாக ரூ.1.12 கோடி இழப்பீட்டுத் தொகை ஏற்கெனவே விவசாயிகளின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது.
பயிா்க் காப்பீடு பதிவு செய்துள்ள தகுதியான அனைத்து விவசாயிகளுக்கும் இழப்பீட்டுத் தொகையினை பெறுவதற்கு தொடா் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று அதில் குறிப்பிட்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
அடுத்த 3 மணி நேரத்திற்கு எந்தெந்த மாவட்டங்களில் மழை?
முதல்வர் விஜய் தலைமையில் ஐஏஎஸ், ஐபிஎஸ் மாநாடு!

எந்த கோயிலில் என்ன விசேஷம்?

தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு கர்நாடக அரசு பணிந்து விடாது: முன்னாள் அமைச்சர் துரைமுருகன்
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK


