பொங்கல் சமயத்தில் தமிழ்நாட்டு கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு காலத்தில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் விமரிசையாக நடைபெற்ற பொங்கல் டெஸ்டுகள்தான் ஞாபகத்துக்கு வரும். 1967-ல் தொடங்கிய முதல் பொங்கல் டெஸ்ட் ஆட்டம் (பாகிஸ்தானுக்கு எதிராக) டிராவில் முடிந்தது.
அதற்குப் பிறகு 1973, 75, 77, 79, 80, 82, 85, 88 எனக் கடகடவென 9 பொங்கல் டெஸ்டுகள் சென்னையில் நடைபெற்றுள்ளன. ஜனவரி வந்தாலே சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கு சேப்பாக்கம் மைதானத்தின் கதவுகள் எப்போது திறக்கும் என்கிற ஆர்வம்தான் அதிகமாக இருந்திருக்கும். இதை இன்று எண்ணிப் பார்க்கும்போது ஆச்சரியப்படாமல் இருக்கமுடியாது. ஆனால் 1988-ல் இருந்து பொங்கல் டெஸ்டுக்கு ஒரேடியாக மூட்டைக் கட்டிவிட்டார்கள்.
கொடுமை என்னவென்றால் இப்போது, சென்னையில் பொங்கல் டெஸ்ட் மட்டுமில்லை, டெஸ்ட் ஆட்டங்கள் நடைபெறுவதே அரிதான விஷயமாகிவிட்டது. (கரோனா காரணமாக அடுத்த மாதம் இங்கிலாந்துக்கு எதிரான 2 டெஸ்டுகள் சென்னை சேப்பாக்கத்துக்குக் கிடைத்துள்ளன.)
கடந்த 12 வருடங்களில் 2 டெஸ்ட் ஆட்டங்கள் மட்டுமே சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றுள்ளன. இந்தியாவில் முக்கியமான டெஸ்ட் மையங்களில் வேறு எதற்கும் இந்த அவல நிலை இல்லை. (1973 முதல் 1988 வரை 15 ஆண்டுகளில் சென்னையில் 14 டெஸ்டுகள் நடைபெற்றுள்ளன.)

கிரிக்கெட் ஆட்டங்கள் சரிசமமாக எல்லா மையங்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்கிற விதிமுறையும் ஐசிசி அட்டவணையைப் பின்பற்றவேண்டிய கடமையும் உள்ளதால் பொங்கல் டெஸ்டை நடத்தமுடியாமல் போனதாகச் சொல்கிறார்கள். ஆனால் என். சீனிவாசன் பிசிசிஐ தலைவராக இருந்தபோது இதில் ஆர்வம் செலுத்தாதபோது வேறு யாரைக் குறை சொல்லமுடியும்? ஆஸ்திரேலியாவில் பாக்ஸிங் டெஸ்டுக்குத் தரும் முக்கியத்துவத்தை நாமும் பொங்கல் டெஸ்டுக்கு அளிக்கலாமே!
டெஸ்ட் கிரிக்கெட் மேலும் வளா்ச்சி பெறவும், ரசிகா்களிடம் ஈா்ப்பு ஏற்படவும், இங்கிலாந்து, ஆஸ்திரேலியா போன்று 5 நிரந்தர டெஸ்ட் ஆடும் மையங்களை பிசிசிஐ ஏற்படுத்த வேண்டும் என கோலி கூறியுள்ளார். இதற்குச் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் கங்குலியும் உள்ளதாகத் தெரிகிறது. இதனால் சென்னைக்கு அதிக டெஸ்டுகள் கிடைக்குமா எனத் தெரியாது. ஆனால் பொங்கல் டெஸ்டை மீட்டுக்கொண்டு வர கங்குலியின் நண்பரும் அவருடைய ஆலோசகருமான என். சீனிவாசனும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் புதிய தலைவர் ரூபா குருநாத்தும் நடவடிக்கை எடுக்கவேண்டும். இந்தப் பாரம்பரியத்தையும் மீட்கவேண்டும் என்கிற ரசிகர்களின் கோரிக்கை இனியாவது நிறைவேற வேண்டும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

டிசிஎஸ் பங்குகள் 2.5% சரிவுடன் நிறைவு!

இந்தியா வருகிறார் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோ!

அதிர்ச்சியையும்,வேதனையையும் அளிக்கிறது- ஜன நாயகன் படத்துக்கு குரல் கொடுத்த நடிகர் ரஜினி

பல நிலைகளில் மிக மோசமானது..! - ஜன நாயகன் விவகாரம் குறித்து ஆர்ஜே பாலாஜி!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


