ஆங்கிலத்திற்கு அடுத்தபடியாக இணையத்தில் இனிய
ஆதிக்கம் செலுத்தும் மொழி நம் தமிழ் மொழி !
புலம்பெயர்ந்த தமிழர்கள் யாவரும் என்றும்
புலம் மறக்காமல் வளர்க்கும் நம் தமிழ் மொழி !
அழியும் மொழிகளில் பட்டியலிட்ட ஐ .நா .மன்றமே
ஆச்சரியம் அடைந்தது இணையத்தில் தமிழ் வளர்ச்சிக் கண்டு !
அழிவில்லை என்றும் நம் தமிழுக்கு அறிவிப்போம்
அகிலம் முழுவதும் காணலாம் இணையத்தில் தமிழ் !
கதை ,கவிதை ,கட்டுரை ,மதிப்புரை அனைத்தும்
கண்டு ரசிக்கலாம் எழுதி மகிழலாம் இணையத்தில் !
பதிவிட்ட சில நொடிகளில் எங்கும் காணலாம்
பரந்து விரிந்த உலகம் முழுவதும் வாசிக்கலாம் !
விஞ்ஞான வளர்ச்சியான இணையத்தின் பயனை
விவேகமாகப் பயன்படுத்தி வென்றவன் தமிழன் !
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே கவிமலர் தொடங்கியவன்
பைந்தமிழில் கவிதைகள் பதித்தவன் அடியவன் நான் !
ஐந்து லட்சம் ரசிகர்கள் கண்டு மகிழ்ந்துள்ளனர்
அனைத்து முன்னணி இணையங்களிலும் இணைப்பு !
தமிழன் இல்லாத நாடே இல்லை உலகில்
தமிழர்களின் இணைப்புப் பாலம் இணையத்தில் தமிழ் !
இன்றுவரை எந்த வெளிநாடும் சென்றதில்லை
எல்லா நாட்டிலும் கவிதை ரசிகர் உண்டு எனக்கு !
இணையத்தில் மட்டும் பதியவில்லை படைப்புகளை
இதயத்திலும் பதிந்ததால் பெற்றது உலகப் புகழ் !
இணையத்தில் தமிழ் வளர்க்கும் தினமணி கவிதை மணிக்கு
இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் !
தினமணி இணை(த)யத்தில் வாழும் நம் தமிழ்
திக்கெட்டும் புகழ் பரப்பும் தித்திக்கும் தமிழ் பரப்பும் !
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே தற்காலிக சண்டை நிறுத்தம்: டிரம்ப் தகவல்!

அரசியல் சர்ச்சைகளுக்கு அடங்காத இசை!

கூட்டுப் பாலியல் வன்கொடுமை சம்பவம்: முதல்வர் பொறுப்புடன் செயல்பட போவது எப்போது?

தமிழ் சினிமாவின் முகம் மாற்றிய இயக்குநர்களின் முதல் படைப்புகளுக்கு 'இசை இளையராஜா'
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |


