கேரள முதல்வர் நடனமாடும் விடியோ! மெட்டாவில் இருந்து நீக்கம்!தாய் மொழியுடன் மற்றொரு மொழியைக் கற்க வேண்டும்: அமித் ஷாதமிழ்நாட்டில் மின்சாதன உற்பத்தித் துறை வளர்ச்சிக்கு ரூ. 300 கோடி முதலீடு!எந்தவொரு துண்டுச் சீட்டுக்கும் அடிபணிய மாட்டேன்: சட்டப் பேரவைத் தலைவர் ஜே.சி.டி. பிரபாகர்நடிகர் விஜய் சேதுபதிக்கு துணை நிற்போம் - அதிமுக எம்.பி. இன்பதுரைதிறன் மையங்களை விரிவுபடுத்த 2 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்து! தமிழக அரசுரூ.11,000 கோடியில் முதலீடு: முதல்வர் விஜய் முன்னிலையில் லண்டனில் ஒப்பந்தம்!16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு!

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே தற்காலிக சண்டை நிறுத்தம்: டிரம்ப் தகவல்!

இஸ்ரேல்-ஹிஸ்புல்லா இடையே மேற்கொள்ளப்பட்ட தற்காலிக சண்டை நிறுத்தம் குறித்து...

Donald Trump

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் - கோப்புப் படம்

Published On :

இஸ்ரேல் - ஹிஸ்புல்லா ஆயுதக்குழுவினர் இடையேயான தற்காலிக சண்டை நிறுத்தத்திற்கு ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

லெபனானுக்குள் கடந்த கால் நூற்றாண்டுக்கும் மேலாக, இஸ்ரேல் படைகள் ஊடுருவியுள்ள நிலையில், நெதன்யாகுவுடன் மேற்கொண்ட தொலைபேசி உரையாடலைத் தொடர்ந்து, டிரம்ப் தனது சமூக ஊடகப் பதிவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

​இஸ்ரேல் படைகள் "பெய்ரூட்டுக்குச் செல்லாது என்றும், அங்கு சென்று கொண்டிருந்த படைகள் ஏற்கனவே திருப்பி அனுப்பப்பட்டுவிட்டன" என்றும் டிரம்ப் கூறினார்.

"அனைத்துவிதமான துப்பாக்கிச் சூடு தாக்குதல்களும் நிறுத்தப்படும் என்றும், இஸ்ரேல் அவர்களைத் தாக்காது, அவர்களும் இஸ்ரேலைத் தாக்க மாட்டார்கள் என்றும் ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது" என அதிபர் கூறினார்.

டிரம்பின் இந்தச் செய்தியை வெளியிட்ட சில நேரங்களுக்குப் பிறகு, லெபனானிலிருந்து ஏவுகணைகள் ஏவப்பட்டதை இஸ்ரேல் கண்டறிந்து, வடக்கு இஸ்ரேலின் சில பகுதிகளில் உள்ள இஸ்ரேல் மக்களை பாதுகாக்கப்பட்ட இடங்களில் இருக்குமாறு எச்சரித்தது.

1948-ஆம் ஆண்டில் மத்திய கிழக்கில் இஸ்ரேல் நாடு புதிதாக உருவானதுமுதல் அந்த நாட்டுக்கும், அண்டை நாடான லெபனானுக்கும் மோதல் நிலவி வருகிறது.

குறிப்பாக, இஸ்ரேல் மீது ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய திடீர் தாக்குதல் மற்றும் ஹமாஸ், ஈரானுக்கு ஆதாரவாக ஹிஸ்புல்லா அமைப்பினர் இஸ்ரேல் மீது நடத்திய தாக்குதல் சம்பவங்களால் மோதல் மேலும் தீவிரமடைந்தது.

ஈரானுடன் அமெரிக்கா சண்டை நிறுத்தம் செய்ததையடுத்து, அமெரிக்காவின் மத்தியஸ்தத்தின்பேரில் வாஷிங்டனில் வைத்து இஸ்ரேலுக்கும், லெபனான் அரசுக்கும் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட்டது.

எனினும், லெபனான் அரசுடன் இஸ்ரேல் செய்து கொண்ட இந்தச் சண்டை நிறுத்தத்தை ஹிஸ்புல்லா அமைப்பினர் ஏற்கவில்லை என்று கூறப்பட்ட நிலையில், தற்காலிக சண்டை நிறுத்தத்துக்கு ஹிஸ்புல்லா அமைப்பு ஒப்புக்கொண்டுள்ளது.

Summary

US President Donald Trump has stated that Israel and the Hezbollah armed group have agreed to a temporary ceasefire.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.