இன்று நீட் மறுதோ்வு: விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள்இன்று சா்வதேச யோகா தினம்: மோடியுடன் இணைந்து யோகாசனம் செய்ய 6 லட்சம் அமைப்புகள் பதிவுமேக்கேதாட்டு அணை கட்டுவதில் கா்நாடகம் உறுதி: மாநில நீா்வளத் துறை அமைச்சா் ராமலிங்க ரெட்டிசென்னையிலிருந்து செல்லும் 7 விரைவு ரயில்கள் திருவள்ளூா், அரக்கோணத்தில் நின்று செல்லும் 6 மாவட்டங்களில் இன்று பலத்த மழைக்கு வாய்ப்புரூ. 440 கோடி இருப்பு உள்ள திரிணமூல் வங்கிக் கணக்குகள் முடக்கம்!
/

மல்லுக்கட்டும்  ஜல்லிக்கட்டு ! கவிஞர் இரா .இரவி 

Updated On :16 ஜனவரி 2017, 4:27 pm IST
ஏறுதழுவுதல் என்பது தமிழர்களிடையே 
இன்றல்ல என்றும் நடைமுறையில் உள்ளது !
எதற்காக  தடை   செய்கிறார்கள் என்று 
எண்ணிப் பார்த்தால் விளங்கியது சதி !
உலகமயம் என்ற அரக்கனின்  வேலை   
உள்ளூர் நாட்டு மாடுகள் அழிப்பு வேலை !
மேலோட்டமாகப் பார்த்தால் இத்தடை 
மாடுகள் காப்புப் போலத்தான் தெரியும்  !
உள்குத்து வேலை ஆராய்ந்தால் புரியும் 
ஒருவழியாக காளை இனத்தை அழித்தல் ! 
காட்டு விலங்கு அல்ல காளை 
வீட்டு உறுப்பினர் எங்கள் காளை !

தமிழனின் தன்னிகரில்லா வீரத்தை  வியந்து 
தரணி பாராட்டுவது பொறுக்கவில்லை !
கொட்டக்  கொட்டக் குனிபவன் அல்ல 
கொட்டம் அடக்கப் புறப்பட்டு விட்டோம் !
எவ்வளவு அடித்தாலும் தாங்குகிறான் என்று 
எங்கள் மீது தப்புக்கணக்கு வேண்டாம் !
பொறுமைக்கும் ஒரு எல்லை  உண்டு 
பொங்கி எழுந்தால் தாங்க  மாட்டீர்கள் !
தமிழன் என்றால் இளித்தவாயன் என்று 
தவறாக என்ன வேண்டாம் விழித்து விட்டோம் !
தடையை நீக்குவதைத் தவிர வழியில்லை 
தடையை நீக்கினால் மதிப்புறும் நீதிமன்றம் !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.