பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்)

பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்) - ம.திருமலை; பக்.232; ரூ.200; மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை -625001. 
பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்)

பொருநராற்றுப்படை (விளக்கமும் நயவுரையும்) - ம.திருமலை; பக்.232; ரூ.200; மீனாட்சி புத்தக நிலையம், மயூரா வளாகம், 48, தானப்ப முதலி தெரு, மதுரை -625001.
 தமிழின் தொன்மையையும், இலக்கியப் பெருமையையும் எக்காலத் தலைமுறைக்கும் எடுத்துரைக்கும் வளங்களாக இருப்பவை சங்கத்தமிழ் இலக்கியங்கள்.
 எட்டுத்தொகை, பத்துப்பாட்டு என இரு பெரும் தொகுப்பில் பொருநராற்றுப்படையானது பத்துப்பாட்டில் ஆற்றுப்படை வரிசையில் இரண்டாமிடத்தில் வைத்துப் போற்றப்படும் நூலாகும்.
 இசைப்பாடல் கலைஞர்களான பொருநர்கள் வறுமையில் வாடிய நிலையில், அந்த வறுமையைப் போக்க அரசர்களை நாடிச்சென்று அவர்தம் பெருமைகளைப் பாடி பரிசில் பெற்று வாழ்ந்ததை பொருநராற்றுப்படையின் மூலம் அறியமுடிகிறது.
 இந்நூலாசிரியர் கிரேக்க இலக்கியத்தோடு, பொருநராற்றுப்படையை ஒப்பிட்டு ஆராய்ந்து அதை விளக்கியிருப்பதும், அதில் இடம் பெற்ற உவமைகளை பட்டியலிட்டிருப்பதும் மற்ற நூலாசிரியர்களில் இருந்து அவரை தனித்துவப்படுத்துகிறது. சங்க கால இலக்கியப் படைப்புகளில் பெண்பாற்புலவர்கள் ஏராளமானோர் இடம் பெற்றதாகக் கூறப்படும் நிûயில், இந்தப் பொருநராற்றுப்படையின் ஆசிரியரான முடத்தாமக்கண்ணியாரும் ஒரு பெண்பாற் புலவர் என்றே நம்பப்படுகிறது. முடத்தாமக்கண்ணியார் ஆணா, பெண்ணா என்ற ஆய்வு நோக்கில் அறிஞர்கள் பலர் விவாதித்திருப்பதைக் கூறியுள்ள நூலாசிரியர், முடத்தாமக்கண்ணியாரின் பெயர்க்காரணம் குறித்து அவரது பாடலில் உள்ள ஏற்றி எனும் சொல் மூலம் விளக்கமளித்திருப்பது சிறப்பாகும்.
 பொருநராற்றுப்படை மொத்தம் 248 பாடல்களை எக்காலத்துக்கும் பொருந்தும் வகையில் விளக்கமும், நயவுரையும் படைத்திருப்பது பாராட்டுக்குரியது.
 ஆறு தலைப்புகளில் பொருநராற்றுப்படையை ஆய்வு நோக்கில் அலசி ஆய்ந்திருக்கிறார் நூலாசிரியர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com