
3-ஆவது ஆட்ட நாயகன் விருது வென்ற மெஸ்ஸி..! உலகக் கோப்பைக்குத் தயார்!
லியோனல் மெஸ்ஸி ஆட்ட நாயகன் விருது வென்றது குறித்து...

கால்பந்தை பாஸ் செய்யும் லியோ மெஸ்ஸி. - படம்: ஏபி
எம்எல்எஸ் தொடரில் விளையாடும் லியோனல் மெஸ்ஸி சின்சினாட்டிக்கு எதிரான ஆட்டத்தில் 2 கோல்கள். 1 அசிஸ்ட் செய்து இந்த சீசனில் மூன்றாவது முறையாக ஆட்ட நாயகன் விருது வென்றார்.
இந்த வெற்றியின் மூலமாக இன்டர் மியாமி அணி புள்ளிப் பட்டியலில் இரண்டாவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்த வெற்றியுடன் 7ஆவது முறையாக தொடர்ச்சியாக வென்றுள்ளது.
சின்சினாட்டி அணி தனது சொந்த மண்ணில் இன்டர் மியாமி அணியை எதிர்த்து இன்று விளையாடியது. இந்தப் போட்டியில் இன்டர் மியாமி அணி 5-3 என அசத்தல் வெற்றி பெற்றது.
இந்தப் போட்டியில் லியோ மெஸ்ஸி 24, 55ஆவது நிமிஷத்தில் கோல் அடித்தார். 89ஆவது நிமிஷத்தில் மெஸ்ஸி அடித்த கோல் வலையின் கம்பியில் பட்டு சின்சினாட்டி கோல்கீப்பரின் கையில் உறசி கோல் ஆனதால் அது ஓன் கோலாக மாறியது. ஹாட்ரிக் கோல் வாய்ப்பு மெஸ்ஸியிடம் இருந்து தப்பியது.
ஆர்ஜென் டீனாவை சேர்ந்த மெஸ்ஸி 2023 முதல் எம்எல்எஸ் தொடரில் விளையாடி வருகிறார். கடந்த சீசனில் அதிக கோல் அடித்து தங்கக் காலணி விருது வென்றார்.
நடப்பு சீசனில் 11 கோல்கள் அடித்து மெஸ்ஸி இரண்டாமிடத்தில் இருக்கிறார். ஜூனில் நடைபெறும் கால்பந்து உலகக் கோப்பைக்குத் தயார் என்பதை தனது ஆட்டத்தினால் மெஸ்ஸி நிரூபித்து வருகிறார்.
MESSI HAT TRICK ð©ð©ð© pic.twitter.com/r89IPOglLZ
— Major League Soccer (@MLS) May 14, 2026
Summary
Messi has 2 goals and an assist as Inter Miami rallies for 5-3 victory over Cincinnati
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






