தாயில்லாமல் நான் இல்லை

தாயில்லாமல் நான் இல்லை - சம்சுல் ஹூதா பானு; பக்.204; ரூ.200; கோதை பதிப்பகம், 70, தென்கடைக் குறிச்சி, குறிச்சி அஞ்சல், நங்கவரம், குளித்தலை தாலுகா, திருச்சி - 110.
தாயில்லாமல் நான் இல்லை

தாயில்லாமல் நான் இல்லை - சம்சுல் ஹூதா பானு; பக்.204; ரூ.200; கோதை பதிப்பகம், 70, தென்கடைக் குறிச்சி, குறிச்சி அஞ்சல், நங்கவரம், குளித்தலை தாலுகா, திருச்சி - 110.
 ஒவ்வொருவருக்கும் தனது குழந்தைப் பருவம் குறித்த முதல் நினைவு பசுமரத்தாணிபோல மனதில் பதிந்திருக்கும். சிலருக்கு வாழ்நாளெல்லாம் அந்நினைவு பசுமையாக இருக்கும். பலருக்கு ரண வேதனையாக இருக்கும். அந்தப் பலரில் ஒருவராக தனது வாழ்க்கையைப் பதிவு செய்துள்ளார் இந்நூலாசிரியர்.
 மூன்று அண்ணன்கள், ஓர் அக்காவுக்குப் பிறகு ஐந்தாவது குழந்தையாக பெண்ணாகப் பிறந்த நூலாசிரியர், குழந்தைப் பருவத்திலேயே தாயைப் பறிகொடுத்துவிடுகிறார். வாழ்க்கையை தன்னம்பிக்கையுடன் எதிர்கொண்டும் இன்று சிறந்த குடும்பத் தலைவியாகப் பரிணமித்துள்ளார்.
 கட்டுக்கோப்பான ஓர் இஸ்லாமியக் குடும்பத்தில் பிறந்த ஒரு பெண் குழந்தை வார - மாத இதழ்கள், நாவல்கள் படிப்பதும், இசை கேட்பதும் அவ்வளவு எளிதான காரியமில்லை. தான் மனதில் நினைத்த தனது எண்ணங்களை வெளிப்படுத்தவும், பருவ வயதில் ஏற்படும்
 உடலியக்க மாறுதல்களைத் தெரிந்துகொள்ளவும், அதுகுறித்த விழிப்புணர்வுடன் இருக்கவும் வழிகாட்ட யாருமின்றி தனியொருத்தியாக எதிர்நீச்சல் அடித்துள்ளார் இந்நூலாசிரியர்.
 தன்னலமின்றி வாழ்ந்தால் இயல்பாகவே உடலும் மனதும் வலுவாகும் என்பதை இந்நூல் மறைமுகமாக உணர்த்துகிறது.
 பெண் குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் வழிகாட்டி இந்நூல்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com