சிட்னி டெஸ்டில் இந்திய கிரிக்கெட் வீரர்கள் பும்ரா, சிராஜை இன ரீதியாக இழிவுபடுத்திய ரசிகர்கள் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
டெஸ்ட் தொடரில், முதல் டெஸ்டை 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி கண்டது ஆஸ்திரேலியா. மெல்போர்னில் நடைபெற்ற 2-வது டெஸ்டில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று தொடரை 1-1 என சமன் செய்துள்ளது. 3-வது டெஸ்ட் சிட்னியில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற ஆஸி. கேப்டன் டிம் பெயின், பேட்டிங்கைத் தேர்வு செய்தார்.
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 105.4 ஓவர்களில் 338 ரன்கள் எடுத்தது. இந்திய அணி இன்று மிகவும் சுமாராக விளையாடி, 100.4 ஓவர்கள் விளையாடி, 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. 3-ம் நாள் முடிவில் 197 ரன்கள் முன்னிலையுடன் ஆஸ்திரேலிய அணி 2-வது இன்னிங்ஸில் 29 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 103 ரன்கள் எடுத்துள்ளது.
இந்நிலையில் 2-வது மற்றும் 3-வது நாள்களில் சிட்னி மைதானத்தில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் பும்ரா, சிராஜ் ஆகிய இருவரையும் இன ரீதியாக ரசிகர்கள் சிலர் இழிவுபடுத்தியதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து 3-ம் நாள் ஆட்டம் முடிவடைந்த பிறகு இந்திய அணி கேப்டன் ரஹானே, அஸ்வின் ஆகிய இருவரும் கள நடுவர்கள் பால் ரீஃபில், பால் வில்சன் ஆகியோரிடம் இதுகுறித்து புகார் அளித்துள்ளார்கள். மைதானத்தின் பாதுகாவல் அதிகாரிகளிடமும் முறையிடப்பட்டுள்ளது. இதையடுத்து இந்திய வீரர்களை இழிவுபடுத்திய ரசிகர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ஆட்சி மாற்றம்! கேரள சாகித்திய அகாதெமி தலைவர் சச்சிதானந்தன் பதவி விலகல்!

ஆளுநரை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்திய காங்கிரஸ் கட்சியினரை தாக்கிய திமுகவினர்!

காங்கிரஸ் தலைவர் வி.டி. சதீசன் எழுதிய புத்தகம் மே 9-இல் வெளியீடு!

புதுச்சேரி முதல்வராக வரும் 13-ல் பதவியேற்கும் என். ரங்கசாமி!
விடியோக்கள்

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

”நாளை முடிவு செய்யப்பட்டும்!”: தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து திருமா | VCK | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | தவெக ஆட்சியமைப்பதில் சிக்கல்: பின்னணி என்ன? | News and Views | Epi - 32 |
தினமணி செய்திச் சேவை

