தூய்மைப் பணி தனியார்மயமாகிறது? முயற்சியை கைவிட தமிழக அரசுக்கு சிபிஎம் கோரிக்கை!விளையாட்டு விடுதி மாணவர்களுக்கான உணவுப்படி உயர்வு!தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து ஜான் பாண்டியன் விலகல்!இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!பொறியியல் பணி: விழுப்புரம் வழியாக செல்லும் ரயில்கள் நிறுத்தி வைத்து இயக்கம்!மாநகர காவல் ஆணையர்கள் உள்பட 14 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்! லக்னௌ பயிற்சி நிறுவன தீ விபத்து: 14 பேர் பலிசபரிமலை ஐயப்பன் கோயிலிலும் செய்யறிவு! கூட்டத்தைக் கட்டுப்படுத்தும்!அமோனியா கசிவு: ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் - திருமாவளவன் கோரிக்கைவிஜய் பிறந்தநாள்: இன்று பிறந்த குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கிய தவெக!அமோனியா வாயு கசிவு! பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு!அண்ணன் பவருக்கு வந்தவுடன் தமிழ்நாட்டுக்கே பவர் போய்விட்டது! உதயநிதி பேச்சுபள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்: நயினார் நாகேந்திரன்
/

இலங்கை-இங்கிலாந்து முதல் டெஸ்ட் காலேவில் இன்று தொடக்கம்

இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் காலே நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.

Updated On :14 ஜனவரி 2021, 4:24 am IST


காலே: இலங்கை-இங்கிலாந்து அணிகள் இடையிலான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இலங்கையின் காலே நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது.
இங்கிலாந்து அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இரு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. முதல் டெஸ்ட் போட்டி இலங்கையின் காலே நகரில் வியாழக்கிழமை தொடங்குகிறது. இலங்கை அணியைப் பொருத்தவரையில் ஏஞ்செலோ மேத்யூஸ் காயத்திலிருந்து மீண்டு அணிக்கு திரும்பியிருக்கிறார். இவ்விரு அணிகளும் இதுவரை 34 டெஸ்ட் போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் இங்கிலாந்து 15 வெற்றிகளையும், இலங்கை 8 வெற்றிகளையும் பெற்றுள்ளன. 11 போட்டிகள் டிராவில் முடிந்துள்ளன. இந்தப் போட்டி காலை 10 மணிக்கு தொடங்குகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மைதானத்தில் ரசிகர்கள் அனுமதிக்கப்படவில்லை.
இலங்கை (உத்தேச லெவன்): திமுத் கருணாரத்னே (கேப்டன்), குசல் பெரேரா, குசல் மென்டிஸ்/லஹிரு திரிமானி, தினேஷ் சன்டிமல், ஏஞ்செலோ மேத்யூஸ், நிரோஷன் டிக்வெல்லா (விக்கெட் கீப்பர்), தாசன் ஷனகா, வனிந்து ஹசரங்கா, தில்ருவன் பெரேரா, லசித் எம்புல்டெனியா, சுரங்கா லக்மல்/விஸ்வா பெர்னாண்டோ.
இங்கிலாந்து (உத்தேச லெவன்):  டாம் சிப்லே, ஜக் கிராவ்லே, ஜானி பேர்ஸ்டோவ், ஜோ ரூட் (கேப்டன்), டேன் லாரன்ஸ், ஜோஸ் பட்லர் (விக்கெட் கீப்பர்), சாம் கரன், டாம் பெஸ், ஜேக் லீச், மார்க்வுட், ஜேம்ஸ் ஆண்டர்சன்/ஸ்டூவர்ட் பிராட். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.